அருள்மிகு மத்யார்ஜுனேஸ்வரர் திருக்கோயில், Pettavaithalai - 639112, திருச்சிராப்பள்ளி .
Arulmigu Madhyarjuneshwarar Temple, Pettavaithalai - 639112, Thiruchirappalli District [TM025735]
×
Temple History
தல வரலாறு
சோழமமன்னர் பரம்பரையில் வந்த மூன்றாம் குலோத்துங்கன் சோழன் காலத்தில் பொங்கி வரும் காவேரியின் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தவும் சோழவளநாடு சோறுடைந்து என்ற தொல்புகழை நிலை நாட்டவும் உயக்கொண்டான் என்னும் வாய்க்காலை வெட்டுவித்து அவ்வாய்க்கால் உற்பத்தி ஸ்தானத்தில் மூன்றாம் குலோத்துங்கன் மன்னனால் மெய்யன்புடன் எழுப்பப்பட்டது தான் இத்தலம் ஆகும். மேலும் பிர்மஷர்த்தி தோஷம் நிவர்த்தியாவதுடன் சகல நோய்களும் பிணிகளும் நிவர்த்தியாகும்.மேலும் முன்பொறு காலத்தில் பொற்றாலம் பூவாய் சித்தர் இவ்வூரில் வாழ்ந்ததாகவும் அவர் பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பபை கோளாறு மற்றும் இதர பெண்களுக்கு உண்டான பிரச்சனைகளுக்கு இத்திருக்கோயில் சுவாமியையும் அம்பாளையும் மனமுறுக வேண்டி பிரார்த்தனை செய்து மருந்து வழங்கி பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்கி வந்தார் என்றும் பின்னை இத்திருக்கோயிலில் ஒரு கல்தூணில் ஐக்கியமானதாக செவிவழிச்செய்தி உண்டு.மேலும் இன்றளவும்...சோழமமன்னர் பரம்பரையில் வந்த மூன்றாம் குலோத்துங்கன் சோழன் காலத்தில் பொங்கி வரும் காவேரியின் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தவும் சோழவளநாடு சோறுடைந்து என்ற தொல்புகழை நிலை நாட்டவும் உயக்கொண்டான் என்னும் வாய்க்காலை வெட்டுவித்து அவ்வாய்க்கால் உற்பத்தி ஸ்தானத்தில் மூன்றாம் குலோத்துங்கன் மன்னனால் மெய்யன்புடன் எழுப்பப்பட்டது தான் இத்தலம் ஆகும். மேலும் பிர்மஷர்த்தி தோஷம் நிவர்த்தியாவதுடன் சகல நோய்களும் பிணிகளும் நிவர்த்தியாகும்.மேலும் முன்பொறு காலத்தில் பொற்றாலம் பூவாய் சித்தர் இவ்வூரில் வாழ்ந்ததாகவும் அவர் பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பபை கோளாறு மற்றும் இதர பெண்களுக்கு உண்டான பிரச்சனைகளுக்கு இத்திருக்கோயில் சுவாமியையும் அம்பாளையும் மனமுறுக வேண்டி பிரார்த்தனை செய்து மருந்து வழங்கி பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்கி வந்தார் என்றும் பின்னை இத்திருக்கோயிலில் ஒரு கல்தூணில் ஐக்கியமானதாக செவிவழிச்செய்தி உண்டு.மேலும் இன்றளவும் இப்பிரார்த்தனை தொடர்ந்து நடைபெற்று வருவது கூடுதல் சிறப்பு ஆகும்.தற்போது பெண்களுக்கு உண்டான பிரச்சனைகளுக்கு பொற்றாலம் பூவாய் சித்தரிடம் வேண்டி ஜீவஜோதியான கல்டதூனில் பிரார்த்தனை சீட்டு கட்டு வழிபடுவது வழக்கமாக இருந்து வருகிறது.