அருள்மிகு கரும்பாயி அம்மன் திருக்கோயில், Pettavaithalai - 639112, திருச்சிராப்பள்ளி .
Arulmigu Karumbayee Amman Temple, Pettavaithalai - 639112, Thiruchirappalli District [TM025738]
×
Temple History
தல வரலாறு
திருச்சி மாவட்டம் திருவரங்கம் வட்டம் பேட்டவாய்த்தலை அருள்மிகு கரும்பாயி அம்மன் திருக்கோயிலில் அருள் பாலிக்கும் கரும்பாயி அம்மன் சுவாமி பல ஆண்டுகளுக்கு முன் கேரள மாநிலம் மலையாளத்திலிருந்து வந்ததாகவும் ஒவ்வொரு வருடமும் பூஜைக்குரிய பிராணிகளை தனக்கு பலி கொடுக்கும்படி பழிவாங்கி கொண்டிருந்ததாகவும் அதனால் அங்குள்ளவர்கள் அம்பாளை கரும்பினால் தேர் ஜோடனை செய்து அதற்குள் வைத்து கட்டி காவேரி ஆற்றில் கொண்டு வந்து போட அது உருண்டு கொண்டே வந்து இந்தக் காவிரியில் கிடந்ததாகவும் பலங்காவேரியில் இருக்கும் திரு.சுவாமிநாத பிள்ளை திரு காவிரியில் நீராடி தலை முழுகிய போது அவர் தலையில் இந்த அம்பாள் இடித்துள்ளது அந்த இடத்தில் கல் இருப்பதாக நினைத்து திரு.சுவாமிநாத பிள்ளை வேறு ஒரு இடத்தில் போய் நீராடிய...திருச்சி மாவட்டம் திருவரங்கம் வட்டம் பேட்டவாய்த்தலை அருள்மிகு கரும்பாயி அம்மன் திருக்கோயிலில் அருள் பாலிக்கும் கரும்பாயி அம்மன் சுவாமி பல ஆண்டுகளுக்கு முன் கேரள மாநிலம் மலையாளத்திலிருந்து வந்ததாகவும் ஒவ்வொரு வருடமும் பூஜைக்குரிய பிராணிகளை தனக்கு பலி கொடுக்கும்படி பழிவாங்கி கொண்டிருந்ததாகவும் அதனால் அங்குள்ளவர்கள் அம்பாளை கரும்பினால் தேர் ஜோடனை செய்து அதற்குள் வைத்து கட்டி காவேரி ஆற்றில் கொண்டு வந்து போட அது உருண்டு கொண்டே வந்து இந்தக் காவிரியில் கிடந்ததாகவும் பலங்காவேரியில் இருக்கும் திரு.சுவாமிநாத பிள்ளை திரு காவிரியில் நீராடி தலை முழுகிய போது அவர் தலையில் இந்த அம்பாள் இடித்துள்ளது அந்த இடத்தில் கல் இருப்பதாக நினைத்து திரு.சுவாமிநாத பிள்ளை வேறு ஒரு இடத்தில் போய் நீராடிய போது அங்கும் தலையில் முட்டி உள்ளது. இதுபோல் பல நாட்கள் நீராடிய போது தலையில் முட்டி உள்ளதால் கிராமத்தார்கள் எல்லோரும் சேர்ந்து கல்லை எடுத்து கரைக்கு கொண்டு வந்து பார்த்தால் அம்பாள் உருவத்துடன் அமைந்திருந்தாலும் அம்பாள் தன்னை இங்கேயே கோயில் கட்டி பூஜிக்கும் படி திரு.சுவாமிநாத பிள்ளை கனவில் தோன்றி சொன்னதாகவும் அதனால் காவேரி கரை ஓரத்தில் திருக்கோயில் ஒன்று அமைத்து அதில் அம்பாளை பிரதிஷ்டை செய்து கரும்புடன் கட்டப்பட்டு வந்ததின் காரணமாக கரும் பாயி அம்மன் என பெயரிட்டு அன்று முதல் வழிபட்டு வருவதாக இங்குள்ள ஆன்றோர்களும் வயது முதிர்ந்த பெரியோர்களும் செவிவழி செய்தியாக சொல்லப்பட்டு வருகிறது