திருச்சி மாவட்டம் திருவரங்கம் வட்டம் பேட்டவாய்த்தலை அருள்மிகு கருப்பாயி அம்மன் திருக்கோயிலில் அருள் பாலிக்கும் கருப்பாயி அம்மன் சுவாமி பல ஆண்டுகளுக்கு முன் கேரள மாநிலம் மலையாளத்திலிருந்து வந்ததாகவும் ஒவ்வொரு வருடமும் பூஜைக்குரிய பிராணிகளை தனக்கு பலி கொடுக்கும்படி பழிவாங்கி கொண்டிருந்ததாகவும் அதனால் அங்குள்ளவர்கள் அம்பாளை கரும்பினால் தேர் ஜோடனை செய்து அதற்குள் வைத்து கட்டி காவேரி ஆற்றில் கொண்டு வந்து போட அது உருண்டு கொண்டே வந்து இந்தக் காவிரியில் கிடந்ததாகவும் பலங்காவேரியில் இருக்கும் திரு.சுவாமிநாத பிள்ளை திரு காவிரியில் நீராடி தலை முழுகிய போது அவர் தலையில் இந்த அம்பாள் இடித்துள்ளது அந்த இடத்தில் கல் இருப்பதாக நினைத்து திரு.சுவாமிநாத பிள்ளை வேறு ஒரு இடத்தில் போய் நீராடிய...