அருள்மிகு ஆஞ்சநேயசுவாமி திருக்கோயில், Thiruchirappalli - 620020, திருச்சிராப்பள்ளி .
Arulmigu Anjeneyaswamy Temple, Kallukuzhi, Thiruchirappalli - 620020, Thiruchirappalli District [TM025822]
×
Temple History
தல வரலாறு
தல வரலாறு
நமது கண்ணுக்கு காண முடியாததும், பாலில் எங்கும் வியாபித்திருப்பதுமாகிய நெய்யைக் காண பாலைக் காய்ச்சி தயிராக்கி, தயிரில் மத்தினை ஊன்றி முறுக்கக் கடைந்தால் அதிலிருந்து வெண்ணையும், நெய்யும் பெறலாம். அதுபோல கடவுள் இவ்விலத்தில் காண முடியாதபடி மறைந்திருக்கின்றார். அவரைக் காண்பதற்கு பேரன்பாகி மத்தினை ஊன்றி, அறிவாகிய கயிற்றினால் முறுகக் கடைந்தால் அவரைக்காண முடியும். சுமார் 85 ஆண்டுகளுக்கு மேல் திருச்சி ஜங்ஷனில் தற்போது உள்ள பிளாட்பாரத்தின் கிழக்கு கோடியில் மிக மிகச் சிறிய கோவிலாக அமைந்து இருந்தது. 1928...தல வரலாறு
நமது கண்ணுக்கு காண முடியாததும், பாலில் எங்கும் வியாபித்திருப்பதுமாகிய நெய்யைக் காண பாலைக் காய்ச்சி தயிராக்கி, தயிரில் மத்தினை ஊன்றி முறுக்கக் கடைந்தால் அதிலிருந்து வெண்ணையும், நெய்யும் பெறலாம். அதுபோல கடவுள் இவ்விலத்தில் காண முடியாதபடி மறைந்திருக்கின்றார். அவரைக் காண்பதற்கு பேரன்பாகி மத்தினை ஊன்றி, அறிவாகிய கயிற்றினால் முறுகக் கடைந்தால் அவரைக்காண முடியும். சுமார் 85 ஆண்டுகளுக்கு மேல் திருச்சி ஜங்ஷனில் தற்போது உள்ள பிளாட்பாரத்தின் கிழக்கு கோடியில் மிக மிகச் சிறிய கோவிலாக அமைந்து இருந்தது. 1928 - 1929 ம் வருடம் திருச்சிராப்ள்ளி ஈரோடு கிளைப்பாதை மீட்டர் கேஜிலிருந்து பிராட்கேஜாக மாற்றப்பட்டது. மேற்படி இரயில்வே பாதைகளுக்க மத்தியில் அமைந்து இருந்தபடியால், இச் சிறிய கோவிலை வேறு இடத்திற்கு மாற்ற வேடிய அவசியம் ஏற்பட்டது. அதனால் ஸ்ரீ ஆஞ்சநேயப் பெருமானுக்கு அருகமையிலே வேறு இடம் ஒதுக்கப்பட்டது. அச்சமயம் இருந்த ரயில்வே ஏஜெண்ட் மற்றும் பொது மேலாளராக இருந்த உயர்திரு. ஆர்ம்ஸ்பி என்ற மேல்நாட்டு ஆங்கிலப் பெருமகன் அவருக்கு ஆஞ்சநேயரால் ஏற்பட்ட அனுபவப் பூர்வமான சில நிகழ்ச்சிலிருந்தும், பல இந்து பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்கியும், 09.11.1929 ல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவிலை தற்போதுள்ள இடத்திற்கு மாற்றப்பட்டது. இத்திருக்கோயில் ஜங்சனில் இருந்து சுமார் 1/2 கி. மீ தொலைவில் அமைந்துள்ளது. கல்லுக்குழி வழியாகவும் தலைமை அஞ்சல் மேம்பாலம் ரோட்டில் சேதுராமபிளை காலனி மேற்புறம் வழியாகவும் வந்தடையலாம்.
கோயிலின் அமைப்பும் (தோற்றமும்)
இறைவனை அடைந்தவர்கள் அழிவற்ற ஆனந்தத்தில் என்றும் நிலைத்திருப்பர் என நினைத்து கொடிமரத்தை எண்ணையேவணங்கும்படி இத்திருக்கோயிலின் நுழைவு வாயிலில் ராஜ கோபுரம், பக்தர்களை கவரும் வண்ணம் அமைந்துள்ளது. அதன் முன்கிழக்கு பகுதியில் ராமர் பட்டாபிஷேகமும் , ஆஞ்சநேயர் சீதைக்கு சூடாமணி அளிக்கும் காட்சியாலும் சீதாதேவி ஆஞ்சநேயருக்கு கணையாழி கொடுப்பது போன்ற அபூர்வ காட்சிகள் மிக அருமையாக சித்தரிக்கப்பட்டுள்ளது. திருக்கோயில் மேற்கு பக்கத்தில் அருள்மிகு ரங்கநாதரின் பள்ளிக்கொண்ட திருக்கோலம், உற்சவ மூர்த்தியுடன் கூடிய காட்சி, திருவெள்ளரை செந்தாமரைக் கண்ணன் பங்கஜவள்ளி நாச்சியாருடன் கஜேந்திர மோட்சம், நம்மாழ்வார் உடையவர் காட்சி அமைந்துள்ளது. ராஜ கோபுரத்தின் நான்கு புறங்களிலும் மூலவருடன் மற்றும்
வரலாற்று செய்திகள் இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ ஆஞ்சநேயர் மகா சக்தி வாய்ந்தவர் என்றும், பக்தர்களின் குறைகளை நீக்குவதுடன் அவர்களுக்குஅனைத்து செல்வங்களையும் அளித்து காப்பாற்றுகின்றார் என்றும் பக்தர்கள் அனைவரும் போற்றி துதிக்கின்றனர். இத்திருக்கோயிலில் அனைத்து சுபகாரியங்களும், உரிய காலங்களில் திருவிழாக்களும், தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்.க வந்து செல்கின்றார்கள். சனிக்கிழமைகள் மற்றும் அமாவாசை தினங்களில் சிறப்பு வழிபாடுநாட்களாகும். இன்று இத்திருக்கோயில் திருச்சி மாவட்டத்திலேயே ஓர் உன்னத நிலையை அடைந்து இருக்கிறது என்றால் ஸ்ரீ ஆஞ்சநேயரின் அருட்கடாசமே காரணமாகும். பசுவில் பால் அதன் உடல் முழுவதிலும் பரவி இருப்பினும், பால் அதன் மடியில் மட்டும் வெளிப்படுவது போல, ஸ்ரீ ஆஞ்சநேயரின் அருள் உலகம் எங்கும் பரவி இருப்பினும் அவ்வருள் இத்திருக்கோயிலில் வெளிப்படுவதை இன்றும் கண்கூடாக பக்தர்கள் அனுபவித்து வருகின்றனர்.
இந்து சமயத்திற்கு இமாலயம் பர்வதம் போல ஈடு இணையில்லா ஆச்சர்ய புருஷராக விளங்குகின்ற ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீமத் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மாணவப்பருவத்தில் பூர்வாசிரமத்தில் பயிலும்போது இந்த கல்லுக்குழியில் சில வருடம் தங்கி இருந்த சமயம் இத்திருக்கோயிலுடன் பெரும் ஈடுபாடு கொண்டிருந்தார்கள். இத்திருக்கோயிலில் சக்கரத்தாழ்வார், நரசிம்மர் மற்றும் பாண்டுரெங்கர், விநாயகர் மற்றும் முருகன் ஆகிய தெய்வங்களுக்கு தனி சன்னதி உள்ளது. நவக்கிரகங்களுக்கும் தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. சக்கரத்தாழ்வாருக்கு பிரதி மாதம் தோறும் சித்திரை நட்சத்திரம் அன்று சுதர்சன வேள்வி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இவ்வேள்வியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற சக்கரத்தாழ்வாரை பிரார்த்திக்கின்றனர்.
திருவிழாக்கள்
சித்திரை மாதத்தில் ஸ்ரீராம நவமி திருவிழா பத்து நாட்களிலும் சுவாமி சர்வ அலங்காரத்துடன் பக்தர்கள் தரிசிக்க வசதியாக முன் மண்டபத்தில் வைக்கப்ட்டு பத்தாவது றநாள் சுவாமி திருவீதி உலா நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் நவராத்திரி விழா ஒன்பது நாட்களுக்கும் கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதம் அனுமந்ஜெயந்தி எனும் ஆஞ்சநேயர் பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது, அதுசமயம் ஆஞ்சநேயர் திருவீதி உலா சிறப்பாக நடைபெறும். ஆஞ்சநேயர் பஜனை நீகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது.
தியான மண்டபம்
இத்திருக்கோயிலில் சேவார்த்திகளின் வசதிக்காக தியான மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
அன்னதான மண்டபம்
இத்திருக்கோயிலில் தமிழக அரசின் ஆணைக்கினங்க வரும் சேவார்த்திகளுக்கு மதிய அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
நிர்வாக அமைப்பு
இத்திருக்கோயிலினை இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை 20.01.1988 முதல் பொறுப்பேற்றது நிர்வாகம் நடைபெற்று வருகின்றது. இதற்கு மூன்றாம் நிலை செயல் அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆலயதிற்குள் பல மராமத்து பணிகள் நன்கொடையாளர்களின் பொருளுதவியுடன் செய்யப்பட்டுள்ளன.