தல வரலாறு
இத்திருக்கோயில் சுவாமி அனலாடீஸ்வரர் என்னும் பெயர் வழங்குகிறது. வடமொழியில் அக்னிநர்த்தீஸ்வரர் என வழங்கும். பல முனிவர்களின் வேண்டுகோளின்படி சிவபெருமான் திரிபுர சம்ஹாரஞ் செய்யும் பொருட்டு இப்பக்கம் வந்தபோது பிரமன் - நான்முகன்செய்த யாக குண்டத்தில் அக்னி குண்டத்தில் சிவபெருமான் நர்த்தனம் செய்த காரணத்தினால் அனலாடீஸ்வரர் என்று வழங்குவதாகச் சொல்லப்படுகிறது. அந்த யாக குண்டமே தற்போது ஈஸ்வரி தீர்த்தமாக அம்பாள் சந்நதிக்கு முன்னே கிணறு வடிவில் அமைந்துள்ளது. அம்பாள் திரிபுரசுந்தரி என்னும் பெயரால் அழைக்கப்படுகிறார். ஈஸ்வரி தீர்த்தம் அம்பாளின் கருணை வடிவமாக உள்ளது.துஷ்டர்களை சத்துருக்கள் நிவர்த்தி ஆகும் பொருட்டு இந்த ஊர் துஷ்டபுரியம் தொட்டியம் என்று அழைக்கப்படுகிறது.