இத்திருக்கோயில் அக்னீஸ்வரர் என வழங்கும் முனிவர்களின் வேண்டுகோளின்படி சிவபெருமான் திரிபுரம் சம்ஹாரம் செய்யும் பொருட்டு இந்த ஊர் அருகில் வந்தபோது பிரமன், நான்முகன் செய்த யாக குண்டமான -அக்னிகுண்டத்தில் சிவபெருமான் நர்த்தனம் செய்த காரணத்தினால் அனலாடீஸ்வரர் என பெயர் பெற்றுள்ளது. அந்த யாககுண்டமே தற்போது அம்பாள் முன் ஈஸ்வர தீர்த்தமாக உள்ளது. துஷ்டர்களை சத்துருக்கள் நிவர்த்தி ஆகும் பொருட்டு இந்த ஊர் துஷ்டபுரியம் தொட்டியம் என்று அழைக்கப்படுகிறது. திருவண்ணாமலையில் அமைந்துள்ள அருள்மிகு அருணாச்சலேஸ்வர் சுவாமியும், துஷ்டபுரியம் தொட்டியம் அருள்மிகு அனலாடீஸ்வரர் சுவாமியும் பஞ்சபூதங்களில் நெருப்பு ஸ்தலமாக அக்னி ஸ்தலம் அமைந்துள்ள திருக்கோயிலாகும். கிருத்திகை, உத்திரம், உத்திராடம் நட்ச்சத்திர தினங்களில் இவ்வாலய சுவாமியை...