அருள்மிகு மதுரை காளியம்மன் திருக்கோயில், தொட்டியம் - 621215, திருச்சிராப்பள்ளி .
Arulmigu Maduraikalli Amman Temple, Thottiyam - 621215, Thiruchirappalli District [TM025843]
×
Temple History
தல வரலாறு
மதுரைமாநகரில் வீற்றிருந்த காளி கொட்டுக்கு ஆசைப்பட்டு தொட்டியம் சங்கம் புதரில் வந்து அமர்ந்தாள். அப்போது எசங்கராயன் பட்டியில் இருந்த மாடுகள் மேய்ந்துவிட்டு பால் கொடுக்கும் நேரத்தில் சங்கம் புதர் சென்று அம்மனுக்கு பால் தானாக கரந்து கொடுத்து வந்தன. மன்னரிடம் மாடு மேய்பவன் தினமும் மாடு மேய்ந்துவிட்டு சங்கம் புதருக்கு சென்று விட்டு வருகிறது பிறகு பார்த்தால் மாடு பால் கறந்தால் பால் வருவதில்லை. எனவே யாரோ பாலை கறந்து விடுகிறார் என கூறினான். அரசன் பெரும் படையுடன் சங்கம் புதர் சென்று கள்வனை தேட வாளோடு சென்று தேடினான். புதருக்குள் வாளை சொருகினான். சற்று நேரத்தில் புதரிலிருந்து ரத்தம் பீரிட்டது. மன்னர் அதிர்ந்து போனான் பிறகு...மதுரைமாநகரில் வீற்றிருந்த காளி கொட்டுக்கு ஆசைப்பட்டு தொட்டியம் சங்கம் புதரில் வந்து அமர்ந்தாள். அப்போது எசங்கராயன் பட்டியில் இருந்த மாடுகள் மேய்ந்துவிட்டு பால் கொடுக்கும் நேரத்தில் சங்கம் புதர் சென்று அம்மனுக்கு பால் தானாக கரந்து கொடுத்து வந்தன. மன்னரிடம் மாடு மேய்பவன் தினமும் மாடு மேய்ந்துவிட்டு சங்கம் புதருக்கு சென்று விட்டு வருகிறது பிறகு பார்த்தால் மாடு பால் கறந்தால் பால் வருவதில்லை. எனவே யாரோ பாலை கறந்து விடுகிறார் என கூறினான். அரசன் பெரும் படையுடன் சங்கம் புதர் சென்று கள்வனை தேட வாளோடு சென்று தேடினான். புதருக்குள் வாளை சொருகினான். சற்று நேரத்தில் புதரிலிருந்து ரத்தம் பீரிட்டது. மன்னர் அதிர்ந்து போனான் பிறகு அவன் முன் காளி தோன்றினாள், மன்னன் மனம் உறுகி மன்னிக்கும்படி கேட்டான். இன்றும் கருவறையில் உள்ள அருள்மிகு மதுரைகாளியம்மன் மேனியில் இக்காயத்தின் வடு உள்ளது. தாயே உனக்கு என்ன வேண்டும் ஏன் இப்படி அமர்ந்து இருக்கிறாய் என்று மன்னன் கேட்டான். உடனே காளி பட்டியிலிருந்த ஒரு மாட்டை காட்டி இந்த மாடு எங்கெல்லாம் சென்று சுற்றி வருகிறதோ அதெல்லாம் எனக்கு சொந்தம், அதுவே எனது எல்லை என காளி கூறியது. பதினெட்டு பட்டி கிராமம் சுற்றி வந்து புதரில் நின்றது. 18 பட்டி மக்களும் என் பிள்ளைகள் என் அருள்பெற ஒரு அழகான கோயிலை அமைத்து என்னை வழிபட வகை செய்வாயாக, என்று கூறி காளி மறைந்தாள்.காளியின் வாக்கை கனிவுடன் ஏற்று அரசன் உடனே திருப்பணியை மேற்கொண்டான். திருப்பணிகள் நிறைவு பெற்று இன்றும் அருள்மிகு மதுரைகாளியம்மன் திருக்கோயில் அழகாகவும் கம்பீரமாகவும் காட்சி அளிக்கிறது.
பங்குனி பெருந்திருவிழா
ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் இரண்டாம் செவ்வாய்கிழமை அம்மனுக்கு காப்பு கட்டி கதவடைத்து புதன்கிழமை அடைத்த கதவிற்கு ஆயிரம் பானை பொங்கலிட்டு, மூன்றாம் செவ்வாய்கிழமை சுமார் முப்பதடி உயரம் உள்ள பெரிய தேர் ஓலை பிடாரி அம்மன், இருபத்து ஒன்பது அடி உயரமுள்ள சின்ன தேர் மதுரைகாளியம்மன் , திருத்தேர் தலையலங்காரமும், அதன் பின் இரண்டு தூக்கு தேர்களும் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றாள்.