மதுரைமாநகரில் வீற்றிருந்த காளி கொட்டுக்கு ஆசைப்பட்டு தொட்டியம் சங்கம் புதரில் வந்து அமர்ந்தாள். அப்போது எசங்கராயன் பட்டியில் இருந்த மாடுகள் மேய்ந்துவிட்டு பால் கொடுக்கும் நேரத்தில் சங்கம் புதர் சென்று அம்மனுக்கு பால் தானாக கரந்து கொடுத்து வந்தன. மன்னரிடம் மாடு மேய்பவன் தினமும் மாடு மேய்ந்துவிட்டு சங்கம் புதருக்கு சென்று விட்டு வருகிறது பிறகு பார்த்தால் மாடு பால் கறந்தால் பால் வருவதில்லை. எனவே யாரோ பாலை கறந்து விடுகிறார் என கூறினான். அரசன் பெரும் படையுடன் சங்கம் புதர் சென்று கள்வனை தேட வாளோடு சென்று தேடினான். புதருக்குள் வாளை சொருகினான். சற்று நேரத்தில் புதரிலிருந்து ரத்தம் பீரிட்டது. மன்னர் அதிர்ந்து போனான் பிறகு...