தல வரலாறு

வரலாறு 1. இத்திருக்கோயில் கி.பி 6 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. 2. கங்கைகொண்ட முதலாம் இராசேந்திரன், முதலாம் இராசாதி இராசன், சுந்தரபாண்டியன், மகேந்திரவர்ம பல்லவன் ஆகியமன்னர்களால் கட்டப்பட்டது. 3. ஞானசம்பந்தர்,அப்பர், சுந்தரர் ஆகிய மூவரால் பாடப்பெற்ற திருத்தலம். 4. அப்பருக்கு கட்டமுது அளித்த திருத்தலம். 5.பாடல்பெற்ற சோழநாட்டு திருத்தலங்களுள், காவிரியின் வடகரையில் 61 வது தலமாக அமைந்துள்ளது. 6.கல்வாழை தலவிருட்சமாக அமைந்துள்ளது. இத்தலவிருட்சம் 64 சதுர்யுகங்களைக் கண்டிருக்கிறது. 7. 12,000 ஆண்டுகள் கொண்டது ஒரு சதுர்யுகமாகும்.
தல பெருமை
தலபுராணம். 1. இறைவன் சுயம்பு மூர்த்தியாக தோன்றியுள்ளார். இறைவன் திருநாமம் ஞீலிவனேஸ்வரர். 2. இறைவனின் பிற திருநாமம் கதலி வசந்தர், ஞீலிவனநாதர், பரமசம்பு, ஆரணியவிடங்கர், சக்கரத்தியாகர், அதிகார வல்லவர், எழுதரிய பெருமான். 3. சுயம்பு மூர்த்தியாக தோன்றிய இறைவனை விசாலாட்சி கடும்தவம் செய்து வழிபட்டு திருமணம் புரிந்ததாக தலபுராணம் கூறுகிறது. 4. விசாலாட்சி அம்பாளின் தவவழிபாட்டிற்கு தேவலோக சப்த கன்னிகள் உதவியாக இருந்ததால் கல்வாழைகளாக அவதரித்து தலவிருட்சமாக உள்ளனர்.