தல பெருமை
இத்திருக்கோயில் காவிரி கரையில் 500 மீ வடக்கு நோக்கி ஆமூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் எட்டு ஊர் கிராம பொதுமக்கள், வெளியூர் மக்களின் குடிபாட்டு ஸ்தலமாகும். இத்திருக்கோயிலில் குடிபாட்டு மக்களின் வேண்டுதலை நிறைவேற்றும் மற்றும் மொட்டை அடித்து, காதுகுத்தி பிராத்தனைகளை நிறைவேற்றும் ஸ்தலமாகவும் இருக்கிறது. மேற்படி திருக்கோயிலை பிடாரி கோவில் என்று அழைக்கப்படும்.