தல பெருமை
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம் குணசீலம்் ஸ்ரீபிரசன்னவேங்கடாசலபதி பெருமாள் திருக்கோயில் ஸ்தல புராணம் ஸ்ரீய பதியான வைகுண்ட வாஸ தேவன் குணசீல மஹாிஷியின் தவத்தினை ஏற்று திருவேங்கடமுடையான் திருக்கோலத்திலே காட்சியளித்த புண்ணிய சேத்திரம் குணசீலம் திருச்சி சேலம் பிரதான சாலையில் அழகிய காவிாி நதியின் கரையில் அமையப்பெற்றுள்ள இத்திருத்தலமானது தென் திருப்பதி எனவும் புகழப்படுகிறது. முக்கியமாக மனநலம் பாதி்க்கப்பட்டோர் இத்திருத்தலத்தில் 48 நாட்கள் தங்கி எம்பெருமானை அனுதினமும் வழிபட்டால் இவ்வினைகள் யாவும் புரணமாக குணமடைந்து இல்லம் திரும்புகின்றனர் இதுவே இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.