Screen Reader Access     A-AA+
அருள்மிகு சிவபுரீஸ்வரர் திருக்கோயில், Sivayam, Sathiyamangalam - 639120, கரூர் .
Arulmigu Sivabureeshwarar Temple, Sivayam, Sathiyamangalam - 639120, Karur District [TM026056]
×
Temple History

தல வரலாறு

கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், அய்யர்மலைக்கு கிழக்கே 2 கி.மீ. தொலைவில் சிவாயம் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது சிவாயம் அருள்மிகு சிவபுரீஸ்வரர் திருக்கோயிலில் சுவாமி லிங்க வடிவில் கிழக்கு நோக்கி அருள்பாளிக்கிறார். இவ்வூருக்கு சிவபாதசேகரபுரம் என்ற தொன்மையான பெயரும் உள்ளது. இத்திருக்கோயில் ஆதிசிவாயம் அடுத்து அய்யர்மலை என அழைக்கப்படும் தொன்மையான சிவாலயமாகும். திருக்கோயில் அமைப்பு சிவாயம் அருள்மிகு சிவபுரீஸ்வரர் திருக்கோயில் ராஜகோபுரத்தின் எதிரே 16 கால் மண்டபம் அமைந்துள்ளது. நடுப்பகுதியில் இடதுபுறம் கல்தூணில் விநாயகர் மடியில் ஒரு பெண்ணுடன் அமர்ந்த கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். வலதுபுறம் கல்தூணில் முருகப்பெருமான் நான்கு கரத்துடன் மயில் மீது அமர்ந்து கோலத்தில் காட்சி தருகிறார். 16 கால் மண்டபத்தின் வெளிப்பகுதி கிழக்கு பக்கம் ...