Screen Reader Access     A-AA+
அருள்மிகு கமலவல்லிநாச்சியார் திருக்கோயில், உறையூர் - 620003, திருச்சிராப்பள்ளி .
Arulmigu Kamalavalli Nachiyar Temple, Woraiyur, Thiruchirappalli - 620003, Thiruchirappalli District [TM026150]
×
Temple History

தல வரலாறு

நந்தசோழராஜாவுக்கு குழந்தை இல்லாதகுறையைத் தீர்த்து மகாலட்சுமி கமலமலரில் அவதரித்து இவ்விடம் உறைந்த காரணத்தால் திருஉறையூர் என்று பெயர் ஏற்பட்டது. முன்னொரு காலத்தில் இவ்வூரில் ஒரு கோழி யானையைப் போரில் வென்றபடியால் கோழியூர் என்ற பெயரும் ஏற்பட்டது. நந்த சோழனும் உறையூர் கமலவல்லி நாச்சியாரை அரங்கனுக்கு திருமணம் செய்துவைக்கிறார். மூலஸ்தானத்தில் அழகிய மணவாளன் நின்ற திருக்கோலத்திலும் மூலவர் நாச்சியார் கல்யாண அவசரத்தில் வீற்றிருந்த திருக்கோலத்திலும் விளங்குகிறார். இந்த சந்நிதி ஸ்ரீரங்கம் நம்பெருமாளை நோக்கி வடக்குதிசை பார்த்து அமைந்துள்ளது. சந்நிதி ராஜகோபுரத்தின் மேற்கு பகுதியில் உறையூர் நாச்சியார் கல்யாணத் திருக்கோலத்திலும், கோபுரத்தின் கிழக்குப் பக்கத்தில் கற்பக விருக்ஷத்தின் அடியில் ஸ்ரீரங்கநாதனும் கமலவல்லியும் பாணிக்ரஹணம் செய்துகொண்டு முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு காட்சிதரும் சிற்பங்களையும் இன்றும் காணலாம். உறையூர் அருள்மிகு கமலவல்லி...