உறையூர் அருள்மிகு கமலவல்லி நாச்சியார் திருக்கோவில் ஸ்ரீரங்கம் அருள்மிகு அங்கநாத ஸ்வாமி திருக்கோவிலின் உப கோவில் ஆகும். 108 வைணவ திருத்தலங்களில் 2 வது திவ்விய தேசமாக திகழ்கிறது திருச்சி மாநகரின் மத்தியில் இக்கோவில் அமைந்துள்ளது. திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற சிறப்பையும் உறையூர் ஆலயம் பெற்றுள்ளது. திருப்பாணாழ்வார் இத்தலத்தில் அவதரித்த பெருமையும் இத்திருக்கோவிலுக்கு உள்ளது.