ஸ்ரீராமபிரானுக்கு ஏழு தலைமுறைக்கு முந்தைய சிபி சக்ரவர்த்தியால் ஸ்வேதகிரி என்னும் திருவெள்ளறை திருக்கோயில் கட்டப்பட்டதாகும்.
மார்க்கண்டேய மகரிஷி சிவபக்தராக இருந்து மோக்ஷத்திற்கு சிவபெருமானிடம் பிரார்த்தனை செய்தபோது சிவபெருமான் ஸ்வேதகிரியில் எட்டெழுத்து மந்திரத்தை உருவெண்ணி நாராயணன் மூலமாக மோக்ஷத்தை அடையலாம் என்று கூறியதால் மார்க்கண்டேயரின் ஆலோசனையின்படி சிபிசக்ரவர்த்தியால் கட்டப்பட்ட கோயிலாகும்.
மேலும், இத்திருக்கோயிலில் தாயாருக்கு முக்கியத்துவம் கொடுத்து தாயார் முன்னே புறப்பட்டுவர பெருமாள் (செந்தாமரைக்கண்ணன்) பின்னால் வருவது வழக்கமாக உள்ளது. சூரியன் சந்திரன் சாமரம் வீச கருடன், மார்க்கண்டேயர் ஆதிசேஷன், பூமிப்பிராட்டி ஆகியோர் பிரார்த்தனை செய்ய மூலவர் புண்டரீகாக்ஷன் நின்ற திருக்கோலத்தில் பிரயோகச் சக்கரத்துடன் மூலஸ்தானத்தில் காட்சி தருகிறார்.
திருவெள்ளறை ஆலயத்தில் தாயாருக்குத் (செங்கமலவல்லி) தனி சந்நிதி உள்ளது. மேலும், தசாவதாரம், பன்னிரு ஆழ்வார்கள், லட்சுமிநரசிம்மர், சக்கரத்தாழ்வார், ஆண்டாள்,...ஸ்ரீராமபிரானுக்கு ஏழு தலைமுறைக்கு முந்தைய சிபி சக்ரவர்த்தியால் ஸ்வேதகிரி என்னும் திருவெள்ளறை திருக்கோயில் கட்டப்பட்டதாகும்.
மார்க்கண்டேய மகரிஷி சிவபக்தராக இருந்து மோக்ஷத்திற்கு சிவபெருமானிடம் பிரார்த்தனை செய்தபோது சிவபெருமான் ஸ்வேதகிரியில் எட்டெழுத்து மந்திரத்தை உருவெண்ணி நாராயணன் மூலமாக மோக்ஷத்தை அடையலாம் என்று கூறியதால் மார்க்கண்டேயரின் ஆலோசனையின்படி சிபிசக்ரவர்த்தியால் கட்டப்பட்ட கோயிலாகும்.
மேலும், இத்திருக்கோயிலில் தாயாருக்கு முக்கியத்துவம் கொடுத்து தாயார் முன்னே புறப்பட்டுவர பெருமாள் (செந்தாமரைக்கண்ணன்) பின்னால் வருவது வழக்கமாக உள்ளது. சூரியன் சந்திரன் சாமரம் வீச கருடன், மார்க்கண்டேயர் ஆதிசேஷன், பூமிப்பிராட்டி ஆகியோர் பிரார்த்தனை செய்ய மூலவர் புண்டரீகாக்ஷன் நின்ற திருக்கோலத்தில் பிரயோகச் சக்கரத்துடன் மூலஸ்தானத்தில் காட்சி தருகிறார்.
திருவெள்ளறை ஆலயத்தில் தாயாருக்குத் (செங்கமலவல்லி) தனி சந்நிதி உள்ளது. மேலும், தசாவதாரம், பன்னிரு ஆழ்வார்கள், லட்சுமிநரசிம்மர், சக்கரத்தாழ்வார், ஆண்டாள், ஆஞ்சநேயர், மணவாளமாமுனிகள், இராமானுஜர், உய்யக்கொண்டார், எங்களாழ்வான் ஆகியோர்க்கு தனி சந்நிதிகள் உள்ளன.
இத்திருக்கோயிலைச் சுற்றி கமல தீர்த்தம் (தாமரை), வராக தீர்த்தம், மணிகர்ணிகா தீர்த்தம், குசலவ தீர்த்தம் ஆகிய நான்கு தீர்த்தங்களும் கோயிலின் உள்ளே சந்திரபுஷ்கரிணி (சுனை தீர்த்தம்) உள்ளது. சுனை தீர்த்தத்திலிருந்து அமுதுபடிகளுக்கு நீர் எடுத்துக் கொள்ளப்படுகிறது.