ஸ்ரீரங்கம் அருள்மிகு அங்கநாத சுவாமி திருக்கோவிலின் உப கோவிலான திருவெள்ளறை அருள்மிகு புண்டரீகாட்ச பெருமாள் கோவில் திருச்சிலிருந்து துறையூர் செல்லும் வழியில் சுமார் 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. 108 திவ்விய தேசங்களில் நான்காவது திவ்விய தேசமாக திகழ்கிறது. பெரியாழ்வார் மற்றும் திருமங்கை ஆழ்வாரால் பாடல் பெற்ற திருத்தலமாகும். மிக அழகிய நந்தவனமும் கோபுரங்களும் சன்னதிலும் நிறைந்த திருக்கோயிலாகும்.