அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், கீழன்பில் - 621702, திருச்சிராப்பள்ளி .
Arulmigu Mariyamman Templeanbil, Lalgudi, Samayapuram - 621702, Thiruchirappalli District [TM026152]
×
Temple History
தல பெருமை
அன்பில் அருள்மிகு மாரியம்மன் முதலில் சுயம்புவாக அவதரித்து அதன்பின்னர் மூலவர் அம்மன் சுதை வடிவிலும், உத்ஸவர் உலோகத்தாலும் அமையப் பெற்றுள்ளது. அம்பாள் சீதளபரமேச்வரி என்ற திருநாமத்துடன் விளங்குகின்றார். அம்பாள் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் சகோதரி என்றழைக்கப்படுவதுண்டு. இவ்வாலயத்தில் சுயம்பு அம்பாளுக்கு முதலில் அபிஷேகமும், அதன்பின்னர் உத்ஸவருக்கு அபிஷேகமும் நடைபெறுவது வழக்கம். மூலவர் சுதை ஆகையால் அபிஷேகம் கிடையாது. அம்மை மற்றும் கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து தங்கி அம்பாள் திருச்சுற்றில் உள்ள நீர்த்தொட்டியில் நீர் நிரப்பி அபிஷேக தீர்த்தத்தை அர்ச்சகர் மூலம் உடல் மீது தெளித்துக் கொண்டு குணம்பெற்று வருவது கண்கூடாக நடக்கின்றது. பால்காவடி மற்றும் காவடிகள் அக்னிசட்டி போன்ற வேண்டுதல்களும் இங்கு நடைபெறுவது வழக்கம். கண்நோயால் பாதிக்கப்படுபவர்கள் இங்கு அம்மனிடம்...அன்பில் அருள்மிகு மாரியம்மன் முதலில் சுயம்புவாக அவதரித்து அதன்பின்னர் மூலவர் அம்மன் சுதை வடிவிலும், உத்ஸவர் உலோகத்தாலும் அமையப் பெற்றுள்ளது. அம்பாள் சீதளபரமேச்வரி என்ற திருநாமத்துடன் விளங்குகின்றார். அம்பாள் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் சகோதரி என்றழைக்கப்படுவதுண்டு. இவ்வாலயத்தில் சுயம்பு அம்பாளுக்கு முதலில் அபிஷேகமும், அதன்பின்னர் உத்ஸவருக்கு அபிஷேகமும் நடைபெறுவது வழக்கம். மூலவர் சுதை ஆகையால் அபிஷேகம் கிடையாது. அம்மை மற்றும் கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து தங்கி அம்பாள் திருச்சுற்றில் உள்ள நீர்த்தொட்டியில் நீர் நிரப்பி அபிஷேக தீர்த்தத்தை அர்ச்சகர் மூலம் உடல் மீது தெளித்துக் கொண்டு குணம்பெற்று வருவது கண்கூடாக நடக்கின்றது. பால்காவடி மற்றும் காவடிகள் அக்னிசட்டி போன்ற வேண்டுதல்களும் இங்கு நடைபெறுவது வழக்கம். கண்நோயால் பாதிக்கப்படுபவர்கள் இங்கு அம்மனிடம் வந்து பூசாரி மூலம் பச்சிலை சாறு பிழிந்து குணமடைகிறார்கள். அதன் காரணமாக அம்மனுக்கு வெள்ளி கண்மலர்களை காணிக்கையாக வழங்குகின்றனர். அம்பாள், பக்தர்களுக்கு அருள்பாலித்து இத்தலம் பிரார்த்தனை தலமாக விளங்குகின்றது.
இந்த அம்மனுக்கு பங்குனி மாதம் முதலாவது ஞாயிறு அன்று ஆண்டுதோறும் பூச்சொரிதல் விழா வெகுசிறப்பாக நடைபெறுகிறது. திரளான சேவார்த்திகள் அதுசமயம் வந்து அம்மனை தரிசித்து தங்களது பல்வேறு வகையான காணிக்கைகளை சமர்பித்துச் செல்கின்றனர். பூச்சொரிந்த அன்று முதல் அம்மன் விரதம் இருந்து மாப்பட்டினியாக தினைமாவையே ஆகாரமாகவும், பானகம், நீர்மோர், இளநீருடன் அருந்தி பங்குனி இறுதி செவ்வாய் அன்று விரதம் பூர்த்தியடைந்து திருத்தேரில் ஏறி அம்மன் பவனி வருவது கண்கொள்ளா காட்சியாகும். பங்குனி மாதம் கடைசி செவ்வாய் அன்று அம்மன் திருத்தேர் காண திரளான பக்தர்கள் கூட்டம் பலவகையான பிரார்த்தனைகளுடன் வந்துகூடி உணர்ச்சி பெருக்கோடு அம்மனை தரிசித்து வழிபடுவார்கள்.
அம்மனுக்கு வைகாசி மாதம் 5ஆம் தேதி பஞ்சபிரகார உத்ஸவம் நடைபெறும். அம்மனுக்கு உத்ஸவர்) சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் செய்வித்து பவனி வருவது வெகு சிறப்பாக நடைபெறுகிறது.