கீழன்பில் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலின் உப கோவிலாகும். பிரசித்தி பெற்ற 7 மாரியம்மன் கோவில்களில் இத்திருக்கோவில் ஒன்றாகும். இத்திருக்கோவில் மாரியம்மனை சமயபுரம் மாரியம்மனின் தங்கை எனவும் அழைப்பார்கள். இத்திருக்கோவில் திருச்சிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் அமைத்துள்ளது. இலால்குடியிலுருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.