கரியமாலீசர் திருக்கோயில் வரலாறும் இருப்பிடமும்
மகாவிஷ்ணுவினுடைய பத்து அவதாரங்களில் ஒன்றான ஸ்ரீராமர் அவதாரத்தில் தன்னுடைய மனைவியான சீதையை கடத்திச் சென்ற ராவணனையும் மற்றும் கும்பகர்ணனையும் கொன்ற காரணத்தினால் பிரம்மஹத்தி தோஷம் பீடிக்க அவர்களுடைய சாயை ராமரைத் தொடர்ந்து வந்தது. ராமேஸ்வரத்தில் சிவனை வழிபட ராவணனுடைய சாயை மறைந்தது. ஆனால் கும்பகர்ணனுடைய சாயை மீண்டும் தொடர்ந்தது இதிலிருந்து விடுபடுவதன் காரணமாக திருவானைக்கா என்னும் திருத்தலத்தை நெருங்கிய பொழுது தேவர்களும் முனிவர்களும் ஸ்ரீராமரை நோக்கி இங்கு இருக்கும் வெண்ண நாவல் அமர்ந்துறை வேதியனை நீராலும் மலராலும் வழிபாடு செய்தால் பேய் பிசாசு போன்ற துஷ்ட சக்திகளின் துன்பத்திலிருந்து விடுபடலாம் என்று உபதேசிக்க, அதைக்கேட்ட ராமர், திருவானைக்கா திருத்தலத்திற்கு மேற்காக அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள...கரியமாலீசர் திருக்கோயில் வரலாறும் இருப்பிடமும்
மகாவிஷ்ணுவினுடைய பத்து அவதாரங்களில் ஒன்றான ஸ்ரீராமர் அவதாரத்தில் தன்னுடைய மனைவியான சீதையை கடத்திச் சென்ற ராவணனையும் மற்றும் கும்பகர்ணனையும் கொன்ற காரணத்தினால் பிரம்மஹத்தி தோஷம் பீடிக்க அவர்களுடைய சாயை ராமரைத் தொடர்ந்து வந்தது. ராமேஸ்வரத்தில் சிவனை வழிபட ராவணனுடைய சாயை மறைந்தது. ஆனால் கும்பகர்ணனுடைய சாயை மீண்டும் தொடர்ந்தது இதிலிருந்து விடுபடுவதன் காரணமாக திருவானைக்கா என்னும் திருத்தலத்தை நெருங்கிய பொழுது தேவர்களும் முனிவர்களும் ஸ்ரீராமரை நோக்கி இங்கு இருக்கும் வெண்ண நாவல் அமர்ந்துறை வேதியனை நீராலும் மலராலும் வழிபாடு செய்தால் பேய் பிசாசு போன்ற துஷ்ட சக்திகளின் துன்பத்திலிருந்து விடுபடலாம் என்று உபதேசிக்க, அதைக்கேட்ட ராமர், திருவானைக்கா திருத்தலத்திற்கு மேற்காக அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்தில் தன்னுடைய பெயரிலேயே ஒரு தீர்த்தத்தை உருவாக்கினான் ராமதீர்த்தம் என்பது அதனின் பெயர். பின்பு அநகதனை கொண்டு ஒரு மரகத லிங்கம் ஒன்றை செய்து அதற்கு பூஜை செய்தான். பிறகு கும்பகர்ணனுடைய சாயையும் அவனை விட்டு நீங்கியது. கும்பகர்ணனை கொன்ற காரணத்தினால் நீல நிறத்தை உடைய ஸ்ரீராமர் கரிய நிறமாக மாறினார். ஈசனை பிரதிஷ்டை செய்து வழிபட்ட காரணத்தினால் கரியமால்ஈசர் என்ற பெயர் இவருக்கு ஏற்பட்டது.
இந்த ஆலயத்தின் உடைய இருப்பிடம்
திருவானைக்கா திருத்தலத்தில் இருந்து மேற்கே அரை கிலோ மீட்டர் தொலைவில் ராம தீர்த்தமும், ராமர் வழிபட்ட சிவன் கோயிலும் அதாவது கரியமாலீசர் ஆலயம் என்ற பெயரிலே