இராவணணும் கும்பகரணணும் பிரம்ம குல மரபில் வந்தவர்கள். இலங்கை போரில் அவ்விருவரையும் கொன்று சீதையை மீட்டு திரும்பிய இராமனைப் பிராமனோத்தமர்களாகிய அவ்விருவரையும் கொன்ற பாவம் பிரம்மகத்தீ என்னும் பெயரால் நிழலுருவி தொடரலாயிற்று. இராமன் தன்னை தொடரும் இருபெரும் பேயுருவங்களால் அமைதி குலைந்து வருந்தினான். இராமேஸ்வரத்தில் சிவவழிபாடு செய்தான். இராவன வதத்தால் ஏற்பட்ட பாவம் நீங்கியது. ஆயினும் கும்பகர்ணனின் ஆவி தொடர்ந்தது. இதனால் அயோத்தி செல்லும் பயணம் தடைப்பட்டது. பொன்னி ஆற்றங்கரையில் தவம் புரியும் புண்ணியர்களான முனிவர்கள் இடத்தில் சென்று பிரம்மகர்த்தீ நீங்க வழி கேட்டான். முனிவர்கள் ஞானபூமியாகிய நாவற்காட்டிலே சிவலிங்கம் அமைத்து சிவ வழிபாடு செய்ய சொன்னார். இராமனும், சம்புநாயகரின் திருக்கோயிலின் மேற்கு புறத்தில் குளம் வெட்டி அதன் தரையில் கோவில் எடுத்தான்....