அருள்மிகு எல்லையம்மன் திருக்கோயில், திருவல்லிக்கேணி, சென்னை - 600005, சென்னை .
Arulmigu Ellamman Temple, Triplicane, Chennai - 600005, Chennai District [TM000290]
×
Temple History
தல வரலாறு
சென்னையில் தெய்வ மணம் கமிழும் பகுதிகளில் பழமையும் பெருமையும் வாய்ந்த திருவல்லிக்கேணி தென்கோடியில் அருள்மிகு எல்லம்மன் ஆலயம் அமைந்துள்ளது. நீலநதிக் கடலிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் வீ ற் றிருக்கும் சரித்திர புகழ்பெற்ற அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயிலின் பின்புறம் சுமார் அரை பர்லாங்கு துரத்தில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இத் திருக்கோயில் சுமார் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக தெரிய வருகிறது. மேலும் இத்திருக்கோயில் அலுவலகத்தில் கி.பி இரண்டாம் நுற்றாண்டு காலத்தில் வடிவமைக்கப்பட்ட சிற்பம் ஒன்று உள்ளது. எனவே பழமையும் தொன்மையும் வாய்ந்த திருக்கோயில் என அறிய முடிகிறது.நிலமகளின் பொலிவான ஆடையாகத் திகழும் வங்கக் கடலை நோக்கி சிம்ம வாகினியாக...சென்னையில் தெய்வ மணம் கமிழும் பகுதிகளில் பழமையும் பெருமையும் வாய்ந்த திருவல்லிக்கேணி தென்கோடியில் அருள்மிகு எல்லம்மன் ஆலயம் அமைந்துள்ளது. நீலநதிக் கடலிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் வீ ற் றிருக்கும் சரித்திர புகழ்பெற்ற அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயிலின் பின்புறம் சுமார் அரை பர்லாங்கு துரத்தில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இத் திருக்கோயில் சுமார் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக தெரிய வருகிறது. மேலும் இத்திருக்கோயில் அலுவலகத்தில் கி.பி இரண்டாம் நுற்றாண்டு காலத்தில் வடிவமைக்கப்பட்ட சிற்பம் ஒன்று உள்ளது. எனவே பழமையும் தொன்மையும் வாய்ந்த திருக்கோயில் என அறிய முடிகிறது.நிலமகளின் பொலிவான ஆடையாகத் திகழும் வங்கக் கடலை நோக்கி சிம்ம வாகினியாக அன்னை எல்லம்மன் கிழக்கு நோக்கிய சன்னதியில் ஒய்யாரமாய் காட்சியளிக்கிறாள். அம்பாள் சன்னதி முன்பு கொடிக்கம்பம் கம்பீரமாய் காட்சியளிக்க அதன் அருகிலேயே பலிபீடமும் அமைக்கப்பட்டுள்ளது. திருக்கோயிலின் நுழைவு வாயில் முகப்பிலேயே ஸ்ரீ ஆஞ்சநேயரின் உருவ சிலை கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக கோயிலின் உள்ளே சென்று இடதுபுறமாக சென்றால் ஸ்ரீ சக்தி விநாயகரை கண்டு தரிசிக்கலாம். கோயிலின் உள்ளே அம்மனை தரிசித்து வலம் வரும்போது தென்திசையில் தென்முகக் கடவுளான ஸ்ரீ தட்சிணாமூர்த்தியை கண்டு தரிசிக்கலாம். அடுத்ததாக சுற்றுப் பிரகாரங்களில் குடும்ப சமேதரராக ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சுப்ரமணியர் ஸ்ரீ காசி விசாலாட்சி அம்பாளுடன் ஸ்ரீ காசி விஸ்வநாதர் அருள்பாலிக்கின்றார். அதனை அடுத்து கோயிலன் தல விருட்சமான வன்னி மரமும் நாகலிங்கமும் அமையப் பெற்றுள்ளது. அடுத்ததாக தெற்கு நோக்கிய நால்வர் சன்னிதி சோமஸ்கந்தர் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளின் உற்சவர் சன்னதியும் ஸ்ரீ எல்லம்மன் உற்சவர் சன்னதியும் ஸ்ரீ நடராஜர் உற்சவர் சன்னதியும் வரிசையாக அழகு மிளிர அமையப் பெற்றுள்ளது. திருக்கோயிலின் வெளிப் பிரகாரத்தில் ஈசானி மூலையிலே நவக்கிரக சன்னதியும் ஆலய அலுவலகமும் அமையப்பெற்றுள்ளது. இத்திருக்கோயிலில் காலை . மணி முதல் . முடியவும் மாலை . மணி முதல் இரவு . மணி முடியவும் நடை திறந்திருக்கும். நித்ய பூஜை காலை சந்தி . மணி அளவிலும் சாய ரட்சை மாலை . மணி அளவிலும் தினமும் நடைபெற்று வருகிறது.தினசரி இருகால பூஜையாக நடத்தப் பெறுகிறது. மேலும் செவ்வாய் வெள்ளி ஞாயிறு போன்ற தினங்களில் பக்தர்களின் விருப்பத்திற்கேற்ப ஏதேனும் ஒரு காப்பு சிறப்புற நடைபெற்று வருகிறது. பன்னிரு மாதங்களுமே இத்திருக்கோயில் விழாக்கோலம் கண்டு காட்சியளிக்கிறது. ஒவ்வொரு விழாவும் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சித்திரையில் தமிழ் வருட பிறப்பு இளநீர் அபிஷேக விழா சித்ரா பௌர்ணமி விழா வைகாசியில் வைகாசி விசாகம் மற்றும் பூச்சொரியல் மலர் வழிபாடு விழாவும் ஆனியில் ஆனித்திருமஞ்சன விழாவும் ஆடியில் ஆடி பிரம்மோற்சவ விழா நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. மேலும் ஆடிப்பூரத்தில் அம்பாளுக்கு பால்குட ஊர்வலமும் கூழ்வார்த்தலும் அன்னப்பபடையலும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. புரட்டாசியில் நவராத்திரி திருவிழா தினங்களும் ஐப்பசியில் கந்தர் சஷ்டி உற்சவம் தினங்களும் கார்த்திகையில் கார்த்திகை தீபம் கார்த்திகை ந ன் கு சோம வாரங்களும் சிறப்பான விசேஷ பூஜைகளும் மார்கழியில் முப்பது நாட்கள் விசேஷ சிறப்பு பூஜையும் ஆருத்ரா உற்சவமும் தை மாதத்தில் தைப்பூசமும் மாசியில் மாசி மக உற்சவமும் பங்குனியில் பங்குனி உத்திர திருவிழாவும் மற்றும் மாதந்தோறும் கிருத்திகை பிரதோஷம் சங்கடஹர சதுர்த்தி பௌர்ணமி போன்ற தினங்களிலும் விசேஷ அலங்கார வைபவங்கள் சிறப்பு விசேஷ பூஜைகள் வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது.இத்தகைய சிறப்பு வாய்ந்த திருத்தலத்தினை ஆன்மீக அன்பர்கள் பெருவாரியாக வந்து தரிசித்து அருள்மிகு எல்லமனின் அருளுக்கு பாத்திரராக அன்புடன் வேண்டுகிறோம். சென்னை திருவல்லிக்கேணி இரயில் நிலையத்திலிருந்து கிமீ துரத்திலும் எழும்பூர்சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து .கிமீ துரத்தில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலுக்கு மெரினா கடற்கரை வழியாகவும் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை வழியாகவும் வரலாம்.