சென்னையில் தெய்வ மணம் கமிழும் பகுதிகளில் பழமையும் பெருமையும் வாய்ந்த திருவல்லிக்கேணி தென்கோடியில் அருள்மிகு எல்லம்மன் ஆலயம் அமைந்துள்ளது. நீலநதிக் கடலிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் வீ ற் றிருக்கும் சரித்திர புகழ்பெற்ற அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயிலின் பின்புறம் சுமார் அரை பர்லாங்கு துரத்தில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. சென்னை திருவல்லிக்கேணி இரயில் நிலையத்திலிருந்து கிமீ துரத்திலும் எழும்பூர்சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து .கிமீ துரத்தில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலுக்கு மெரினா கடற்கரை வழியாகவும் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை வழியாகவும் வரலாம்.