அருள்மிகு தீர்த்தபாலீஸ்வரர் திருக்கோயில், திருவல்லிக்கேணி, சென்னை - 600005, சென்னை .
Arulmigu Theertha Paleeswarar Temple, Triplicane, Chennai - 600005, Chennai District [TM000298]
×
Temple History
தல வரலாறு
சென்னையில் உள்ள கபாலீஸ்வரர் கோவில் அமைந்துள்ள புராதன தலங்களில் ஒன்று தர்மமிகு.மயிலை கிருஷ்ணம்பேட்டை பகுதியில் முதல் அருள்மிகு தீர்த்தபாலீஸ்வரர் அமைந்துள்ளது. தன்னை வழிபட்ட அகத்திய முனிவர் நோய் தீர அருளியதால் தீர்த்த பாலீஸ்வரர் என்று அழைக்கப்பட்டார்.
பல ஆண்டுகளுக்கு முன், மிகவும் பழமைவாய்ந்த இக்கோயில், பல பூஜைகளை தவறாமல் செய்தும் பக்தர்களால் பெரிதும் கவனிக்கப்படாமல் இருந்தது. ஜகத்குரு ஸ்ரீ காம்கோடி பீடாதிபதி பரமாச்சார்ய சுவாமி சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் கோயிலில் முகாமிட்டு கோயிலின் தொன்மை, சிலையின் சிறப்பு குறித்து பக்தர்களுக்கு விளக்கினார்.
அன்றிலிருந்து இக்கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக மாறி இன்று சிறிது சிறிதாக திருப்பணிகள் நடைபெற்று ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்யும் அளவிற்கு வளர்ந்துள்ளதுசென்னையில் உள்ள கபாலீஸ்வரர் கோவில் அமைந்துள்ள புராதன தலங்களில் ஒன்று தர்மமிகு.மயிலை கிருஷ்ணம்பேட்டை பகுதியில் முதல் அருள்மிகு தீர்த்தபாலீஸ்வரர் அமைந்துள்ளது. தன்னை வழிபட்ட அகத்திய முனிவர் நோய் தீர அருளியதால் தீர்த்த பாலீஸ்வரர் என்று அழைக்கப்பட்டார்.
பல ஆண்டுகளுக்கு முன், மிகவும் பழமைவாய்ந்த இக்கோயில், பல பூஜைகளை தவறாமல் செய்தும் பக்தர்களால் பெரிதும் கவனிக்கப்படாமல் இருந்தது. ஜகத்குரு ஸ்ரீ காம்கோடி பீடாதிபதி பரமாச்சார்ய சுவாமி சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் கோயிலில் முகாமிட்டு கோயிலின் தொன்மை, சிலையின் சிறப்பு குறித்து பக்தர்களுக்கு விளக்கினார்.
அன்றிலிருந்து இக்கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக மாறி இன்று சிறிது சிறிதாக திருப்பணிகள் நடைபெற்று ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்யும் அளவிற்கு வளர்ந்துள்ளது
தல பெருமை
தருமமிகு சென்னையில், கயிலைக்கு ஒப்பான மயிலையில் கற்பகாம்பாள் உடனுறை காபாலீஸ்வரர் ஆலயம் அமைந்த பழம்பெரும் ஷேத்திரங்களில் ஒன்றாகவும், சிவாலயங்களில் தீர்த்த வழி திருவருலான் முதன்மையானது ஆன அருள்மிகு தீர்த்தபாலீஸ்வரர் திருக்கோயில் மயிலையைச் சார்ந்த கிருஷ்ணாம்பேட்டை பகுதியில் அமைந்துள்ளது.
தன்னை வழிபட்ட அகத்திய முனிவர் நோய் தீர அருள்பாலித்ததால் தீர்த்தபாலீஸ்வரர் எனும் பெயர் பெற்றதாகவும், முன்னாட்களில் மாசி மக தீர்த்தவாரி திருவிழாவின்போது சமுத்திரதீரத்தில் இவ்வாலய இறையவன்முதன்மையாக தீர்த்தம் பாலித்த பின்னரே மற்ற மயிலையில் உள்ள சிவா ஆலயங்கள் தீர்த்தம் பாலிக்கும் வழக்கம் இருந்ததனால் ஸ்ரீ தீர்த்த பாலீஸ்வரர் எனவும் திருநாமம் பெற்றதாக தெரிய வருகிறது.
ஆலயம் மிகவும் பழமை வாய்ந்ததோடு மிகவும் பூஜைகள் குறைவின்றி நடைபெற்று வரினும் பக்தர்களால் பெருமளவில் தரிசியாமல் இருந்த நிலையில் பல்லாண்டுகளுக்கு முன்னர்....தருமமிகு சென்னையில், கயிலைக்கு ஒப்பான மயிலையில் கற்பகாம்பாள் உடனுறை காபாலீஸ்வரர் ஆலயம் அமைந்த பழம்பெரும் ஷேத்திரங்களில் ஒன்றாகவும், சிவாலயங்களில் தீர்த்த வழி திருவருலான் முதன்மையானது ஆன அருள்மிகு தீர்த்தபாலீஸ்வரர் திருக்கோயில் மயிலையைச் சார்ந்த கிருஷ்ணாம்பேட்டை பகுதியில் அமைந்துள்ளது.
தன்னை வழிபட்ட அகத்திய முனிவர் நோய் தீர அருள்பாலித்ததால் தீர்த்தபாலீஸ்வரர் எனும் பெயர் பெற்றதாகவும், முன்னாட்களில் மாசி மக தீர்த்தவாரி திருவிழாவின்போது சமுத்திரதீரத்தில் இவ்வாலய இறையவன்முதன்மையாக தீர்த்தம் பாலித்த பின்னரே மற்ற மயிலையில் உள்ள சிவா ஆலயங்கள் தீர்த்தம் பாலிக்கும் வழக்கம் இருந்ததனால் ஸ்ரீ தீர்த்த பாலீஸ்வரர் எனவும் திருநாமம் பெற்றதாக தெரிய வருகிறது.
ஆலயம் மிகவும் பழமை வாய்ந்ததோடு மிகவும் பூஜைகள் குறைவின்றி நடைபெற்று வரினும் பக்தர்களால் பெருமளவில் தரிசியாமல் இருந்த நிலையில் பல்லாண்டுகளுக்கு முன்னர். ஜகத்குரு ஸ்ரீ காமகோடி பீடாதிபதி பரமாச்சாரிய சுவாமிகள் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் அவர்கள் திருக்கோயிலில் முகாமிட்டு, ஆலயத்தின் தொன்மை தலப்பெருமை, மூர்த்தியின் சிறப்பு குறித்து பக்தர்களுக்கு விளக்கி அருளினார். அதுமுதல் இவ்வாலயம் மிகவும் சிறப்புற்று இன்று திருப்பணிகள் சிறிது சிறிதாக நடைபெற்று திரளான பக்தர்கள் தரிசிக்கும்அளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளது.
ஆலயத்தின் தினசரி நித்யப்படி பூஜை சிவாகாம முறைப்படி 2 காலங்களாக நடைபெற்று வருகிறது
காலை சந்தி 8.00 மணி
சாயரஷை 5.30 மணி
ஆலயம் புராதனமாக இருந்ததெனினும். குடமுழுக்கு இன்றி மிகவும் பழமையானதாக இருந்ததை எண்ணி வருந்தி, ஆலய அர்ச்சகர் திரு. காளதீஸ்வர குருக்கள் ஆலய தோட்டக்காரர் திரு.சடையாண்டி நாயக்கர் அவர்களும் மேற்படி ஆலய திருப்பணிகள் செய்ய இறைவனை உளமாற வேண்டியதில், அவரும் ஷையாரின் பக்திக்கு உளம் கனிந்து உ.பி லாட்டரியில் ரூ.10 லட்சம் பரிசு விழ அருள்புரிந்துள்ளார். மேற்படி பரிசுத் தொகையில் ஒரு பகுதியை மூலமாகக் கொண்டு ஆலய திருப்பணிகள் துவக்கப்பட்டு ஆலய பரம்பரை அறங்காவலரின் தீவிர முயற்சியாலும் பின்னர் பல தொண்டுள்ளங்களின் பலனாக படிப்படியாக திருப்பணிகள் நிறைவுற்று 03.07.1987ல் மஹாகும்பாபிஷேகம் சிறப்புற நடைபெற்றது.
ஆலயத்தில் மாதாந்திர பௌர்ணமி பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி மற்றும் வருடாந்திர திருவிழாக்கள் மிகவும் சிறப்புற நடைபெற்று வருகிறது.
சித்திரை வருடபிறப்பு, சித்ரா பௌர்ணமி, ஆனித் திருமஞ்சனம், ஆடிக்கிருத்திகை, பால்குடவிழா, விநாயகர் சதுர்த்தி, நவாராத்திரி, கந்தர்சஷ்டிதிருவிழா, கார்த்திகை தீபம், ஆருத்திரா உற்சவம், பொங்கல் திருநாள், தனுர் மாத விசேஷ பூஜை, தைபூசம், சிவராத்திரி, மாசிமகம் போன்ற விழாக்கள் மிகவும் சிறப்புடனும், பக்தி பரவசத்துடனும் நடத்தப்பட்டு வரப்படுகிறது. மேலும் மாதாந்திர கிருத்திகை மற்றும் உபயதாரர்கள் கிடைக்காத உற்சவங்களை ஸ்ரீ தீர்த்த பாலீஸ்வரர் சன்மார்க்க சபையினர் சிறப்புறச் செய்து வருகின்றனர். மேற்படி சபையினர் மூலம் தினசரி ஜபயோகம் மாலை 7.00 மணியளவில் சிறப்பாக ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த தலத்தினை ஆன்மீக அன்பர்கள் பெருவாரியாக வந்து தரிசித்து அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை தீர்த்த பாலீஸ்வரர் அருளுக்கு பாத்திரராக அன்புடன் வேண்டுகிறோம்.