இத்தகைய பெருமை வாய்ந்த மயிலையைச் சார்ந்த கிருஷ்ணாம்பேட்டையில், மேதை நடேசன் சாலையில் அமர்ந்திருப்பது நம் தொன்மை மிக்க ஸ்ரீதீர்த்தபாலீஸ்வரர் திருக்கோயிலாகும். தன்னை வழிபட்ட அகத்தியர் நோய் தீர அருள்பாலித்ததால் தீர்த்தபாலீஸ்வரர் எனவும், மேலும் முன்னாட்களில் மாசிமக தீர்த்தவாரி திருவிழாவின்போது சமுத்திரத்தில் இவ்வாலய இறைவன் முதன்மையாக தீர்த்தம் பாலீத்த பின்னரே மற்ற ஆலய மூர்த்திகள் தீர்த்தம் பாலிக்கும் வழக்கம் இருந்ததினால் ஸ்ரீதீர்த்தபாலீஸ்வரர் எனவும் - திருநாமம் வழங்கியதாக செவிவழிச் செய்திகள் கூறுகின்றன