இலக்கிய பின்புலம்

இத்திருக்கோயிலின் கட்டிட அமைப்பு சுமார் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படுகிறது.ஆனால் முதலாழ்வார்கள் காலத்திலேயே இத்திருக்கோயில் இருந்துள்ளது. பாடல்கள் பெறாத பல புராதான வைணவத் திருக்கோயில்களில் ஒன்றாக இத்திருக்கோயிலில் இருந்துள்ளது. இத்தலம் தோன்றிய விதம், இறைவன் இங்கு வந்து குடி கொண்டு ஸ்ரீ அம்ருதவல்லித் தாயரை மணம்புரிந்து, மயிலாப்பூர் தோன்றிய விதம், ஸ்ரீ பேயாழ்வார் அவதார வைபவம் ஆகிய புராண வரலாறு ப்ரம்மாண்ட புராணத்தில் மயூரபூரி மஹாத்மியம் என்னும் தலைப்பில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அதனில் இந்த இடம் மாதவபுரம் என குறிப்பிடப்பட்டுள்ளது.