அருள்மிகு அகத்தீஸ்வர சுவாமி திருக்கோயில், வில்லிவாக்கம், சென்னை - 600049, சென்னை .
Arulmigu Agatheeswara Swamy Temple, Villivakkam, Chennai - 600049, Chennai District [TM000317]
×
Temple History
தல பெருமை
சென்னை 600 049, வில்லிவாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து மேற்கு நோக்கி 2 நிமிட தொலைவிலும், வில்லிவாக்கம் இரயில் நிலையத்திலிருந்து 10 நிமிட தொலைவிலும் அருள்மிகு சொர்ணாம்பிகை அம்மன் உடனுறை அருள்மிகு அகத்தீஸ்வர சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.
பரமசிவனுக்கும் பார்வதி தேவிக்கும் மேருமலைச் சாரலில் திருமணம் நடைபெற்ற போது, தேவர்களும், சித்தர்களும், யோகிகள் மற்றும் பல்லாயிரக் கணக்கானோர் கூடியிருந்தனர். அப்போது வடநாடு அமிழ்ந்து தென்னாடு உயர்ந்தது. அதனை சமன்படுத்த அகத்திய பெருமானை பரமசிவன் தென்னாட்டுக்கு அனுப்பினார்.
அகத்திய பெருமான் தென்னாட்டை நோக்கி வரும் வழியில் தற்போது வில்லிவாக்கம் என வழங்கும் இவ்விடத்தில் வில்வலன், வாதாபி என்ற இரு கொடிய அரக்கர்கள் தவ முனிவர்களை அன்புடன் உபசரிப்பது போல் நடித்து மாயத்தால் வாதாபியை மாங்கனி உருவில் மாற்றி,...சென்னை 600 049, வில்லிவாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து மேற்கு நோக்கி 2 நிமிட தொலைவிலும், வில்லிவாக்கம் இரயில் நிலையத்திலிருந்து 10 நிமிட தொலைவிலும் அருள்மிகு சொர்ணாம்பிகை அம்மன் உடனுறை அருள்மிகு அகத்தீஸ்வர சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.
பரமசிவனுக்கும் பார்வதி தேவிக்கும் மேருமலைச் சாரலில் திருமணம் நடைபெற்ற போது, தேவர்களும், சித்தர்களும், யோகிகள் மற்றும் பல்லாயிரக் கணக்கானோர் கூடியிருந்தனர். அப்போது வடநாடு அமிழ்ந்து தென்னாடு உயர்ந்தது. அதனை சமன்படுத்த அகத்திய பெருமானை பரமசிவன் தென்னாட்டுக்கு அனுப்பினார்.
அகத்திய பெருமான் தென்னாட்டை நோக்கி வரும் வழியில் தற்போது வில்லிவாக்கம் என வழங்கும் இவ்விடத்தில் வில்வலன், வாதாபி என்ற இரு கொடிய அரக்கர்கள் தவ முனிவர்களை அன்புடன் உபசரிப்பது போல் நடித்து மாயத்தால் வாதாபியை மாங்கனி உருவில் மாற்றி, உண்ணக் கொடுப்பதும், முனிவர்கள் உண்டவுடன் வாதாபி வெளியே வா என்று அழைத்தவுடன் முனிவரின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளியே வந்துவிடுவான். இவ்விதமாக முனிவர்களை கொன்று துன்புறுத்தி வந்தனர். அகத்திய மாமுனிவர் இப்பகுதி வழியாக வந்தபோது அரக்கர்கள் வழக்கம் போல் மாங்கனி உருவில் இருந்த வாதாபியை அகத்திய மாமுனிவருக்கு கொடுத்து உண்ண வேண்டினார். அரக்கர்களின் சூழ்ச்சியை அறிந்த அகத்திய மாமுனிவர் தனக்கு உபசரிக்கப்பட்ட மாங்கனியின் தன்மையை உணர்ந்து, மாங்கனி உருவில் இருந்த வாதாபியை ஜீரணம் செய்துவிட்டார்.
இது தெரியாத வில்வலன் தனது தம்பியின் பெயரை சொல்லி அழைக்க வாதாபி முனிவரின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வராதது கண்டு மிக கோபம் கொண்டு அகத்திய முனிவரை கடுமையாக எதிர்த்தான். அகத்திய முனிவர் தன் தவ வலிமையால் வில்வலனை வதம் செய்ததால், அகத்திய மாமுனிவருக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடிக்கிறது. அந்த தோஷம் நீங்கப் பெறுவதற்காக இந்த இடத்தில் வில்வ மரத்தடியில் சிவனை லிங்க வடிவத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாலும், இத்தலத்திற்கு வில்லிவாக்கம் என்ற பெயர் ஏற்பட்டது. அங்காரகன் என்ற கிரகத்தால் உலகிற்கே தீமைகள் வருவதை அறிந்து அதை நிவர்த்திக்கப் பெரிய யாகம் ஒன்றை செய்தனர். விசுவாமித்திரர் கலந்து கொண்ட இந்த யாகத்தில் தோன்றிய சக்தி அங்காரகனை வதைக்க அங்காரகன் தன் பேரில் தீர்த்தம் அமைத்தால் கட்டுப்படுத்துவதாக கூறினார். இந்திரன் முதலோனோர் சேர்ந்து இத்தலத்தில் அங்காரக தீர்த்தம் அமைத்து நீராடி வழிப்பட்டனர். அன்றைய தினம் ஆடிமாதம் செவ்வாய்க்கிழமையாகும்
இத்தலத்தில் ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்க் கிழமைகளில் திருக்குளத்தில் நீராடி அருள்மிகு அங்காரகனை வணங்கினால் அங்காரக தோஷம் நீங்கப்பெற்று நீண்ட ஆயுளும், திருமணமாகாத கன்னியர்களுக்கு திருமணமும், பிள்ளைப்பேறு இல்லாத தம்பதியர்க்கு பிள்ளைப்பேறு பாக்கியமும் கிடைக்கும். வியாதி சத்ருக்கள் தொல்லையும் ஒழியும் என தீர்த்தத்தின் மகிமை சொல்லப்படுகிறது இத்திருக்கோயில் சென்னையைச் சுற்றியுள்ள திருக்கோயில்களில் பழமையான திருக்கோயிலாகும். அருள்மிகு அகத்தீஸ்வரர் மூலவர் சிவலிங்கத் திருமேனி கிழக்கு நோக்கியும், அருள்மிகு சொர்ணாம்பிகை அம்மன் சுவாமிக்கு இடது புறம் தெற்கு நோக்கி நிற்க, அம்பாளுக்கு இடதுபுறம் நோக்கி அங்காரக தீர்த்தம் அமைந்துள்ளது
இத்திருக்கோயிலின் ஸ்தல விருட்சம் வில்வ மரம் ஆகும். இத்திருக்கோயிலின் சுவாமி விமானம் கஜபிருஷ்ட விமானமாகும். சுவாமி விமானம் மூன்று நிலைகளை கொண்டதாகும். இத்திருக்கோயிலில் வைகாசி மாதம் பிரம்மோற்சவ திருவிழாவும், ஆடி மாதத்தில் செவ்வாய்க்கிழமை 5 வாரங்கள், புரட்டாசி மாதத்தில் 10 நாட்கள் நவராத்திரி திருவிழாவும், ஐப்பசி மாதத்தில் அன்னாபிஷேகமும், மார்கழி மாதத்தில் ஆரூத்ரா அபிஷேக தரிசனமும், தை மாதத்தில் பொங்கல் திருவிழாவும், மாசி மாதத்தில் மகா சிவராத்திரி திருவிழாவும், பங்குனி உத்திர திருவிழாவும் நடைபெறும்.