சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை நகரினை மன்னன் கூண்பாண்டியன் ஆட்சி புரிந்து வந்தார். அப்போது மதுரையின் கிழக்கே, தற்போது கோயில் வீற்றிருக்கும் பகுதி மகிழ மரங்கள் நிறைந்த காடாக இருந்தது. அக்காட்டினை குறும்பர் எனும் இனத்தவர்கள் ஆக்கிரமிப்பு செய்து அப்பகுதியையே அழித்து வந்தனர். நாளுக்கு நாள் அவர்களின் தொந்தரவு கூடுதலாகவே, ஓர் நாள் இப்பகுதிக்கு வந்த மன்னர் அவர்களின் கொட்டத்தினை அடக்கி விரட்டியடித்தார். அவர்களை விரட்டியபின் தனது வெற்றியினை ஆண்டவனுக்கு சமர்ப்பித்து வணங்கிட, அருகே வைகையில் கிடைத்த அம்பாளை தெற்கு கரையில் தற்போது கோயில் வீற்றுள்ள பகுதியில் வைத்து பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக வரலாறுகள் தெரிவிக்கின்றன.சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை நகரினை மன்னன் கூண்பாண்டியன் ஆட்சி புரிந்து வந்தார். அப்போது மதுரையின் கிழக்கே, தற்போது கோயில் வீற்றிருக்கும் பகுதி மகிழ மரங்கள் நிறைந்த காடாக இருந்தது. அக்காட்டினை குறும்பர் எனும் இனத்தவர்கள் ஆக்கிரமிப்பு செய்து அப்பகுதியையே அழித்து வந்தனர். நாளுக்கு நாள் அவர்களின் தொந்தரவு கூடுதலாகவே, ஓர் நாள் இப்பகுதிக்கு வந்த மன்னர் அவர்களின் கொட்டத்தினை அடக்கி விரட்டியடித்தார். அவர்களை விரட்டியபின் தனது வெற்றியினை ஆண்டவனுக்கு சமர்ப்பித்து வணங்கிட, அருகே வைகையில் கிடைத்த அம்பாளை தெற்கு கரையில் தற்போது கோயில் வீற்றுள்ள பகுதியில் வைத்து பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக வரலாறுகள் தெரிவிக்கின்றன.
தல பெருமை
இரு அம்பிகை தரிசனம்: ஜமதக்னி மகரிஷியின் மனைவி ரேணுகாதேவி. ஒருசமயம் தண்ணீர் எடுக்கச்சென்றபோது, அவ்வழியே சென்ற கந்தர்வனின் அழகை நீரில் கண்டு ஆச்சர்யமடைந்தாள். எனவே ஜமதக்னி, அவளது பத்தினித் தன்மைக்கு களங்கம் ஏற்பட்டதாக சொல்லி, தன் மகன் பரசுராமனால் அவளது. தலையை வெட்டினார். அதன்பின் பரசுராமர், தன் சாமர்த்தியத்தால் தாயை உயிர்ப்பித்தார். இவளே மாரியம்மனாக வணங்கப்படுகிறாள்.
அகிலத்தை ஆளும் பராசக்தி, தனது ஆற்றலை வெளிப்படுத்துவதற்காக எடுத்த அவதாரமே துர்க்கை. யட்ச குலத்தில் அவதரித்த மகிஷாசுரன் எனும் அசுரனை அழிப்பதற்காக பராசக்தி, தன் சக்தியிலிருந்து ஒரு மாயசக்தியைதோற்றுவித்தாள். அந்த சக்திக்கு சிவன் சக்தி கொடுக்க அதுவே முகமாகவும், பிரம்மாவின் சக்தி உடலாகவும், திருமால் கொடுத்த சக்தி பதினெட்டு கரங்களாகவும், எமதர்மனின் சக்தி கூந்தல், அக்னி பகவானின்...இரு அம்பிகை தரிசனம்: ஜமதக்னி மகரிஷியின் மனைவி ரேணுகாதேவி. ஒருசமயம் தண்ணீர் எடுக்கச்சென்றபோது, அவ்வழியே சென்ற கந்தர்வனின் அழகை நீரில் கண்டு ஆச்சர்யமடைந்தாள். எனவே ஜமதக்னி, அவளது பத்தினித் தன்மைக்கு களங்கம் ஏற்பட்டதாக சொல்லி, தன் மகன் பரசுராமனால் அவளது. தலையை வெட்டினார். அதன்பின் பரசுராமர், தன் சாமர்த்தியத்தால் தாயை உயிர்ப்பித்தார். இவளே மாரியம்மனாக வணங்கப்படுகிறாள்.
அகிலத்தை ஆளும் பராசக்தி, தனது ஆற்றலை வெளிப்படுத்துவதற்காக எடுத்த அவதாரமே துர்க்கை. யட்ச குலத்தில் அவதரித்த மகிஷாசுரன் எனும் அசுரனை அழிப்பதற்காக பராசக்தி, தன் சக்தியிலிருந்து ஒரு மாயசக்தியைதோற்றுவித்தாள். அந்த சக்திக்கு சிவன் சக்தி கொடுக்க அதுவே முகமாகவும், பிரம்மாவின் சக்தி உடலாகவும், திருமால் கொடுத்த சக்தி பதினெட்டு கரங்களாகவும், எமதர்மனின் சக்தி கூந்தல், அக்னி பகவானின் சக்தி கண், மன்மதனின் சக்தி புருவம், குபேரனின் சக்தி மூக்கு, முருகனின் சக்தி உதடு, சந்திரனின் சக்தி தனங்கள், இந்திரனின் சக்தி இடை, வருணனின் சக்தி கால் என அனைத்து சக்திகளும் இணைந்த அம்பிகையாக துர்க்கை உருவெடுத்தாள். மகிஷாசுரனுடன் போரிட்டு வென்றதால் இவள் மகிஷாசுரமர்த்தினி என்று பெயர் பெற்றாள். மாரியம்மனும், துர்க்கையும் வேறுவேறு வடிவங்களாக இருந்தபோதிலும், இருவரும் அம்பிகையின் அம்சமாகவே திகழ்கின்றனர். இதனை உணர்த்தும்விதமாக இக்கோயிலில் இவ்விருவரும் சேர்ந்த அமைப்பில் காட்சி தருகின்றனர். இவ்வாறு ஒரே அம்பிகையில், இரண்டு அம்பாஸ்களை தரிசனம் செய்வது அபூர்வம்.