Screen Reader Access     A-AA+
அருள்மிகு வீரராகவ பெருமாள் கோயில், தெற்கு மாசி வீதி, மதுரை - 625001, மதுரை .
Arulmigu Veeraragava Perumal Temple, South Masi Veethi, Madurai - 625001, Madurai District [TM031993]
×
Temple History

தல வரலாறு

பல்லாண்டுகளுக்கு முன்பு சோழவந்தான் அருகிலுள்ள தேனுரில் தன் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா நடந்தது. அக்கால கட்டங்களில் பெருமாளுக்குரிய உற்சவ மண்டபங்கள் நெற்கதிர் கால்களைக் கொண்டு அமைக்கப்படும் , ஒருமுறை கள்ளழகர் இந்த மண்டபத்தில் எழுந்தருளியபோது திடீரென தீப்பிடித்து விட்டது. அங்கிருந்த அரசர் உள்ளிட்ட அனைவரும் தள்ளி நின்றனர். ஆனால் அமுதார் என்ற அர்ச்சகர் தன் உயிரையும் பொருட்பதடுத்தாமல் தீயில் சூழ்ந்த கள்ளழகர் சிலையை தூக்கி ஆற்று மணலில் போட்டுவிட்டு மயங்கி விழுந்தார். இதைக்கண்ட அரசன் அமுதாரே நான் ஆண்டாண்டு காலமாக கள்ளழகர் தீவிர பக்தனாக உள்ளேன். அத்துடன் இவ்விழாவில் முதல் மரியாதையும் எனக்கு கிடைக்கிறது. அப்படியிருந்தும் கூட அழகரை காப்பாற்றாமல் ஏன் உயிரையே பெரிதென கருதி ஓதுங்கி நின்றேன். நீங்களோ உயிரையும்...