Screen Reader Access     A-AA+
அருள்மிகு பாண்டிமுனீஸ்வரர் திருக்கோயில், மேலமடை - 625020, மதுரை .
Arulmigu Pandimuneeswarar Temple, Melamadai - 625020, Madurai District [TM032060]
×
Temple History

தல பெருமை

அருள்மிகு பாண்டிமுனிஸ்வரர் திருக்கோவில் 18ம் நூரற்றாண்டை சேர்ந்த கோவிலாகும்.கரூர் மாவட்டம் நெரூர் கிராமத்திலிருந்து திரு.பெரியசாமி சேர்வை திருமதி.வள்ளியம்மாள் குடும்பத்தினர் பிழைப்பு தேடி மதுரை வந்து மானகிரி கிராமத்தில் தங்கி இருந்தபோது திருமதி.வள்ளியம்மாள் அவர்களின் கனவில் தான் (பாண்டி முனிஸ்வரர்) இந்த இடத்தில் புதைந்துள்ளாதாகவும் தன்னை பூமிக்கடியில் இருந்து வெளியே எடுத்து வைக்குமாறும் அதற்கு கைமாறாக உன் சந்ததிகளை வாழ வைப்பேன் என்று பலமுறை கூறவே அவரும் கிராமத்தினரிடம் எடுத்து கூறி கனவில் கூறிய இடத்தை தோண்டி பார்க்கவே கனவில் கூறியது போல் சிலை இருந்துள்ளது. சிலையை எடுத்து அவருக்கு முதலில் ஜடாமுனி என்று பெயரிட்டு அவ்விடத்திலேயே ஓலை வேய்ந்த கீற்று கொட்டகையில் வைத்து வழிபாடு செய்து வந்தனர்,பின்னாளில் கர்னாடக ராஜாக்கள் இந்த ஜடாமுனி...