அருள்மிகு காளமேகப் பெருமாள் திருக்கோயில், திருமோகூர் - 625107, மதுரை .
Arulmigu Kalamega Perumal Temple, Thirumohur - 625107, Madurai District [TM032061]
×
Temple History
தல வரலாறு
அருள்மிகு காளமேகப்பெருமாள் திருக்கோயில் வைணவ திவ்ய தேசங்கள் 108ல் 46 வது திவ்ய தேசம் ஆகும். இத்திருக்கோயில் ஐந்து நிலைகளைக் கொண்ட ராஜகோபுரத்துடன் அரிதிலும் அரிதான சதுர்முக விமானத்துடன் அமையப்பெற்ற திருத்தலமாகும். இத்திருத்தலம் மதுரையிலிருந்து மேலுார் செல்லும் சாலையில் யா.ஒத்தக்கடை என்ற இடத்திலிருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் துாரத்தில் மாணிக்கவாசகர் உதித்தருளிய திருவாதவூர் செல்லும் சாலையில் திருமோகூர் என்ற அழகிய கிராமத்தில் அமைந்துள்ளது. மதுரைக்கு வடகிழக்கே சுமார் 10 கிலோமீட்டர் துாரத்தில் திருமோகூர் ஆலயம் வயல்சூழ்ந்த இடத்தில் வானளாவிய கோபுரத்துடன் வனப்புறக் காட்சியளிக்கிறது. புராணங்களில் இந்த இடம் மோகனஷேத்திரம் என்று போற்றப்படுகிறது. பிரம்மாண்ட புராணம் , மாத்சிய புராணம் ஆகிய இரண்டும் இத்தல பெருமையை விளக்குகின்றன. திருப்பாற்கடலைக் கடைந்தபோது அதிலிருந்து...அருள்மிகு காளமேகப்பெருமாள் திருக்கோயில் வைணவ திவ்ய தேசங்கள் 108ல் 46 வது திவ்ய தேசம் ஆகும். இத்திருக்கோயில் ஐந்து நிலைகளைக் கொண்ட ராஜகோபுரத்துடன் அரிதிலும் அரிதான சதுர்முக விமானத்துடன் அமையப்பெற்ற திருத்தலமாகும். இத்திருத்தலம் மதுரையிலிருந்து மேலுார் செல்லும் சாலையில் யா.ஒத்தக்கடை என்ற இடத்திலிருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் துாரத்தில் மாணிக்கவாசகர் உதித்தருளிய திருவாதவூர் செல்லும் சாலையில் திருமோகூர் என்ற அழகிய கிராமத்தில் அமைந்துள்ளது. மதுரைக்கு வடகிழக்கே சுமார் 10 கிலோமீட்டர் துாரத்தில் திருமோகூர் ஆலயம் வயல்சூழ்ந்த இடத்தில் வானளாவிய கோபுரத்துடன் வனப்புறக் காட்சியளிக்கிறது. புராணங்களில் இந்த இடம் மோகனஷேத்திரம் என்று போற்றப்படுகிறது. பிரம்மாண்ட புராணம் , மாத்சிய புராணம் ஆகிய இரண்டும் இத்தல பெருமையை விளக்குகின்றன. திருப்பாற்கடலைக் கடைந்தபோது அதிலிருந்து ஒருதுளி இந்தத் தலத்தில் விழுந்தது என்றும், அந்ந இடத்தி்ல் தேவர்கள் ஒரு குளம் வெட்டினர் என்றும் அந்த குளத்தைத் திருப்பாற்கடல் (ஷீராப்தி தீர்த்தம்) என்றழைத்தனர். இதனாலேயே பெருமாள் பள்ளிகொண்ட பாற்கடல் வண்ணனாக இத்திருத்தலத்தில் காட்சியளிக்கிறார்.. இங்கு ஆண்டுதோறும் தெப்ப உற்சவம் நடைபெற்று வருகிறது.
இத்தலத்தில் அருள்மிகு காளமேகப்பெருமாள்,ஸ்ரீதேவி,ஸ்ரீபூதேவி சமேதராய் நின்ற திருக்கோலத்துடன் காட்சியளிக்கிறார். மேலும் தாயார் மோகனவல்லித்தாயார் என்றும் மோகவல்லிதாயார் என்றும் திருமோகூர் வல்லி என்றும் படிதாண்டாப்பத்தினி என்றும் கருணை பொழியும் திருமுகத்தோடு காட்சியளிக்கிறார்.
இத்திருக்கோயிலில் சக்கரத்தாழ்வார் சந்நதி மிகவும் பிரசித்தி பெற்றதாகும். முன்புறம் சக்கரத்தாழ்வாராவும் பின்புறம் நரசிங்க பெருமாள் ஆகவும் திருவாழி ஆழ்வார் திருக்கோலத்தில் 48 தேவதைகள் சுற்றலும் இருக்க ஆறு வட்டங்களுக்குள் 154 மந்திர எழுத்துகள் பொறித்திருக்க 16 திருக்கரங்களிலிலும் 16 படைக்கலங்கள் ஏந்தி மூன்று கண்களுடன் திருமுடி தீ போல் ஒளிர்வது போல அருள்புரிய ஓடி வருவதைப்போல வேறு எங்கும் இல்லாத வகையி்ல் அருள்பாளிக்கிறார்.
திருமங்கையாழ்வார், மற்றும் நம்மாழ்வார் ஆகியோர்களால் மங்களாசாசனம் பாடல் பெற்ற திருத்தலமாகும். நம்மாழ்வார் இப்பெருமாளை நம்பத்தக்க உயிர்த்தோழனை ஆப்தன் என்றழைப்பது போல அழைக்கிறார்.