அருள்மிகு ஜெனகை மாரியம்மன் திருக்கோயில், சோழவந்தான் - 625214, மதுரை .
Arulmigu Janagai Marriamman Temple, Sholavandan - 625214, Madurai District [TM032079]
×
Temple History
தல வரலாறு
மாரியம்மன் பெயர்க்காரணம் கொண்டு பார்க்குமிடத்து இரு செய்திகள் தெளிவாகின்றன.
புராணக்கதையின்படி ஜெனகா புரி ஜெனகன் என்ற பிற்காலப் பாண்டியன் ஆண்டதால் ஜெனகா புரி,
இவற்றுள் ஜெனகன் என்ற பாண்டியன் சோழவந்தானை வந்தடைந்து அதற்கு ஜெனகா புரி என்றும், கோவில்களுக்கு முறையே ஜெனகை மாரியம்மன் கோவில் என்றும், ஜெனகை நாராயணப் பெருமாள் கோவில் என்றும் பெயர் சூட்டி இருக்கலாம் என்பது தெளிவாகிறது. அதன்படி, பிற்காலப் பாண்டியனான ஜெனகைப் பாண்டியனின் காலம், பதினைந்து, பதினாறாம் நூற்றாண்டு என வைத்துக்கொண்டால் இம்மாரியம்மன் கோவில் அக்காலத்திலேயே இருந்தது மட்டுமன்றிச் சாதாரண நிலையில் இருந்திருக்க வேண்டும்.
மாரி என்ற கடவுள் பெண் தெய்வவழிபாடும், கொற்றவை வழிபாடும், பிற்காலத்தவை என்று எடுத்துக்கொண்டால் பதினைந்து, பதினாறாம் நூற்றாண்டுகளில் இம்மாரியம்மன் கோவிலும் அவ்வளவு சிறப்படையாமல் இருந்து...மாரியம்மன் பெயர்க்காரணம் கொண்டு பார்க்குமிடத்து இரு செய்திகள் தெளிவாகின்றன.
புராணக்கதையின்படி ஜெனகா புரி ஜெனகன் என்ற பிற்காலப் பாண்டியன் ஆண்டதால் ஜெனகா புரி,
இவற்றுள் ஜெனகன் என்ற பாண்டியன் சோழவந்தானை வந்தடைந்து அதற்கு ஜெனகா புரி என்றும், கோவில்களுக்கு முறையே ஜெனகை மாரியம்மன் கோவில் என்றும், ஜெனகை நாராயணப் பெருமாள் கோவில் என்றும் பெயர் சூட்டி இருக்கலாம் என்பது தெளிவாகிறது. அதன்படி, பிற்காலப் பாண்டியனான ஜெனகைப் பாண்டியனின் காலம், பதினைந்து, பதினாறாம் நூற்றாண்டு என வைத்துக்கொண்டால் இம்மாரியம்மன் கோவில் அக்காலத்திலேயே இருந்தது மட்டுமன்றிச் சாதாரண நிலையில் இருந்திருக்க வேண்டும்.
மாரி என்ற கடவுள் பெண் தெய்வவழிபாடும், கொற்றவை வழிபாடும், பிற்காலத்தவை என்று எடுத்துக்கொண்டால் பதினைந்து, பதினாறாம் நூற்றாண்டுகளில் இம்மாரியம்மன் கோவிலும் அவ்வளவு சிறப்படையாமல் இருந்து பிற்காலத்தில் சிறப்படைந்து இருக்கலாம்.
19-ஆம் நூற்றாண்டியல் இறுதியில் இம்மாரியம்மன் மீது பாடப்பெற்ற கும்மிப் பாடலொன்று கிடைத்துள்ளது. இது 1918இல் பதிப்பிக்கப்பட்டதாகத் தெரிகின்றது. இக்கும்மிப்பாடலை இயற்றியவர் திரு. கவிக்குஞ்சரம்பிள்ளை என்பவராவார். இப்பாடல் மாரியம்மனின் வைகாசிப் பெருவிழா நிகழ்ச்சியில் இறுதிநாளான தேர்த்தினத்தன்று நடத்தப்படுகின்ற செடில் குத்தி வருகின்ற நிகழ்ச்சியை நேர்முகப்படுத்திக் கூறுகின்றது. இக்கும்மிப்பாடலும் சில செய்திகளைத் தருகின்றது. கோவிலின் தோற்றம் சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பாக இருக்கலாம் என்பது இப்பாடலின் மூலம் தெரிய வருகிறது. சாதாரண நிலையில் இருந்த கோவில் பின்னர்ப் பொதுமக்களால் பெரிதும் போற்றப்படும் நிலையை அடைந்தது. பெரும் திருவிழாக்கள் கொண்டாடப்பட்டுச் சுற்றுப்பறத்து ஊர்மக்கள் பல்லாயிரம்பேர் கலந்து கொள்ளும் வண்ணம் கோவிலின் பெருமை பரவியது. எனவே கும்மிப்பாடல் தோன்றிய காலம் பத்தொன்பதாம் நூற்றாண்டு என்பதும், இதற்கு முன்னரே பதினாறாம் நூற்றாண்டில் கோவில் தோன்றியிருக்கலாம் என்பதும் அறியமுடிகிறது. ஆயினும் இதற்கான கல்வெட்டுச் சான்றாதாரங்கள் இல்லை.மமக்க்