மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சோழவந்தான் கிராமத்தில் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் திருக்கோயில், கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. இத்திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கோயிலாகும். திருக்கோயிலின் அருகே 500 மீட்டர் தொலைவில் விசாக நட்சத்திர ஸ்தலமான அருள்மிகு சனீஸ்வரபகவான் திருக்கோயில் அமைந்துள்ளது. சோழவந்தானிலிருந்து 3 கி.மீ. தொலைவில் திருவேடகத்தில் ஏடுஎதிர்த்தோடிய புராண சிறப்புமிக்க அருள்மிகு ஏடகநாதசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. சோழவந்தானிலிருந்து 8 கி.மீ. தொலைவில் சித்திரை நட்சத்திர ஸ்தலமான அருள்மிகு சித்திரத வல்லபபெருமாள் திருக்கோயில் (குருஸ்தலம்) அமைந்துள்ளது. அருள்மிகு ஜெனகை மாரியம்மன் திருக்கோயிலில் கௌமார முறைப்படி பூஜை முறைகள் நடைபெற்று வருகிறது. அருள்மிகு ஜெனகை மாரியம்மன் திருக்கோயில் இப்பகுதி மக்களால் சொல்லி வரம் கொடுக்கும் சோழவந்தான்...
06:00 AM IST - 12:00 PM IST | |
04:00 PM IST - 09:00 PM IST | |
12:00 PM IST - 09:00 PM IST | |
காலை 6.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 12.00 மணிக்கு நடை சாத்தப்படும் மாலை 4.00 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு இரவு 9.00 மணிக்கு நடை சாத்தப்படும். செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் காலை 6.00 மணிக்கு நடைதிறக்கப்பட்டு இரவு 9.30 மணிக்கு நடைசாத்தப்படும். மார்கழி மாதத்தில் அதிகாலை 4.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 12.00 மணிக்கு நடை சாத்தப்படும் மாலை 4.00 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு இரவு 8.45 மணிக்கு நடை சாத்தப்படும் |