Screen Reader Access     A-AA+
அருள்மிகு ஜெனக நாராயணப் பெருமாள் திருக்கோயில், சோழவந்தான் - 625214, மதுரை .
Arulmigu Janagai Narayanaperumal Temple, Sholavandan - 625214, Madurai District [TM032083]
×
Temple History

தல பெருமை

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சோழவந்தான் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. மதுரையிலிருந்து மேற்கே 21 கி.மீ தூரத்தில் வற்றாத புண்ணிய நதியாம் வைகையின் வடகரையில் அமைந்துள்ளது. மதுரையிலிருந்து சென்னை செல்லும் புகைவண்டி வழித்தடத்தில் இவ்வூர் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலின் பிரதான நுழைவு வாயில் கிழக்குமுகமாக உள்ளது. ஜெனக நாராயணப்பெருமாள் ஸ்ரீ தேவி, பூ தேவி சமேதரராய் நின்ற கோலத்தில் அருள்பாளிக்கின்றார். தாயார் சன்னதியும், ஆண்டாள் சன்னதியும், கெருடாழ்வார் சன்னதியும் அமைக்கப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசியன்று எம்பெருமான் காட்சிதர சொர்க்க வாசலும் உள்ளது. புதிதாகப் பள்ளியறையும் அமைக்கப்பட்டுளளது.

இலக்கிய பின்புலம்

சோழவந்தான் நகரத்தின் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் (சங்ககாலத்தில்) வழங்கிய பெயர் பாகனூர் என்பதாகும். இப்பெயர் சோழன் தலைகொண்ட வீரபாண்டியனின் ஆட்சிக்காலத்தில் (கி.பி.946-966) சோழந்தகச் சதுர்வேதிமங்கலம் எனப்பட்டது. இராசராசன் சோழன் காலத்திலிருந்து பாண்டிய நாடு 200 ஆண்டுகாலம் சோழராட்சிக்கு உட்பட்டிருந்தது. இராசராசனின் ஆட்சிக்காலத்தில் இவ்வூர் அவனது சிறப்புப் பட்டப்பெயர்களில் ஒன்றான ஜனநாதன் என்பதன் அடிப்படையில் ஐனநாதச் சதுர்வேதிமங்கலம் எனப்பெயர்பட்டது. இராசராசன் காலத்தில் இங்குள்ள பெருமாள் கோயில் கட்டப்பட்டு ஜனநாத விண்ணகரம் என்று பெயர் பெற்றது. எனவே இக்கோயில் ஓராயிரம் ஆண்டுத் தொன்மை வாய்ந்ததாகும். கி.பி.1200க்குப் பின் மீண்டும பாண்டியர் ஆட்சிக்கு வந்தபோது இவ்வூரின் பெயரை முன்பிருந்தபடியே சோழகுலாந்தகச் சதுர்வேதிமங்கலம் என்று மாற்றினார். கோயிலின் பெயரை மட்டும ஜனகை நாராயணப் பெருமாள் கோயில் என்றே அழைத்தனர். இக்கோயில்...