அருள்மிகு தர்மசாஸ்தா திருக்கோயில், திம்மராசநாயகனுர் - 625512, தேனி .
Arulmigu Tharmasastha Temple, Thimmarasanayakanur - 625512, Theni District [TM032107]
×
Temple History
தல வரலாறு
இத்திருக்கோயில் அமைந்துள்ள பகுதியை தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர நினைத்த ஆங்கிலேயர்கள் இப்பகுதியை ஆண்ட திம்மராயநாயக்கரிடம் இப்பகுதியை தங்கள் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக ஏற்றுக்கொண்டால் நீங்கள் விரும்பியதை தருவோம் என்று கேட்க திம்மராயநாயக்கர் தனக்குள்ள தோஷம் நீங்க ஆயிரம் மனித தலைகளை வெட்டுவதற்கு அனுமதி வேண்டுமென்றும் இதற்காக தன்னை எதுவும் செய்யக்கூடாது என்றும் கேட்க ஆங்கிலேயரும் அதறகு சம்மதித்தனர். அதன்படி கணவாய் வழியே செல்வோரின் தலைகளை வெட்ட ஆரம்பித்து 999 தலைகளை வெட்டி முடித்தார். ஒரு நாள் அருள்மிகு தர்மசாஸ்தா மனித உருவெடுத்து வெள்ளை குதிரையில் இப்பகுதியை கடந்தார். 1000-வது தலையை வெட்ட போகிறோம் என்ற சந்தோசத்தில் ஆராயாமல் அவரது தலையை வெட்ட தர்மசாஸ்தாவின தலை திம்மராயநாயக்கரது...இத்திருக்கோயில் அமைந்துள்ள பகுதியை தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர நினைத்த ஆங்கிலேயர்கள் இப்பகுதியை ஆண்ட திம்மராயநாயக்கரிடம் இப்பகுதியை தங்கள் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக ஏற்றுக்கொண்டால் நீங்கள் விரும்பியதை தருவோம் என்று கேட்க திம்மராயநாயக்கர் தனக்குள்ள தோஷம் நீங்க ஆயிரம் மனித தலைகளை வெட்டுவதற்கு அனுமதி வேண்டுமென்றும் இதற்காக தன்னை எதுவும் செய்யக்கூடாது என்றும் கேட்க ஆங்கிலேயரும் அதறகு சம்மதித்தனர். அதன்படி கணவாய் வழியே செல்வோரின் தலைகளை வெட்ட ஆரம்பித்து 999 தலைகளை வெட்டி முடித்தார். ஒரு நாள் அருள்மிகு தர்மசாஸ்தா மனித உருவெடுத்து வெள்ளை குதிரையில் இப்பகுதியை கடந்தார். 1000-வது தலையை வெட்ட போகிறோம் என்ற சந்தோசத்தில் ஆராயாமல் அவரது தலையை வெட்ட தர்மசாஸ்தாவின தலை திம்மராயநாயக்கரது கையை கவ்வி கொண்டது.
இதைக் கண்டு கலங்கிய திம்மராயநாயக்கர் இவ்வளவு நாட்கள் இது போன்று இல்லையே இது என்ன சோதனை என்று அழுது மன்னிப்பு வேண்ட ஸ்ரீதர்மசாஸ்தாவானவர் அறியாமல் நீ செய்த பிழையை தான் மன்னிப்பதாகவும் இது போன்ற செயல்கள் இனிமேல் இவ்விடத்தில் நடக்காதவண்ணம் பொது மக்களை காக்க, தான் இவ்விடத்தில் காவல் தெய்வமாக குடியிருக்க போகிறேன் என்று கூறி மறைந்தார். அன்று முதல் இன்று வரை இப்பகுதியில் செல்லும் மக்களுக்கு எவ்வித துன்பமும் நேராது காத்து வருகிறார்.