இத்திருக்கோயில் அமைந்துள்ள பகுதியை தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர நினைத்த ஆங்கிலேயர்கள் இப்பகுதியை ஆண்ட திம்மராயநாயக்கரிடம் இப்பகுதியை தங்கள் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக ஏற்றுக்கொண்டால் நீங்கள் விரும்பியதை தருவோம் என்று கேட்க திம்மராயநாயக்கர் தனக்குள்ள தோஷம் நீங்க ஆயிரம் மனித தலைகளை வெட்டுவதற்கு அனுமதி வேண்டுமென்றும் இதற்காக தன்னை எதுவும் செய்யக்கூடாது என்றும் கேட்க ஆங்கிலேயரும் அதறகு சம்மதித்தனர். அதன்படி கணவாய் வழியே செல்வோரின் தலைகளை வெட்ட ஆரம்பித்து 999 தலைகளை வெட்டி முடித்தார். ஒரு நாள் அருள்மிகு தர்மசாஸ்தா மனித உருவெடுத்து வெள்ளை குதிரையில் இப்பகுதியை கடந்தார். 1000-வது தலையை வெட்ட போகிறோம் என்ற சந்தோசத்தில் ஆராயாமல் அவரது தலையை வெட்ட தர்மசாஸ்தாவின தலை திம்மராயநாயக்கரது கையை கவ்வி கொண்டது. இதைக்...