அருள்மிகு சந்தன மகாலிங்கம் சுவாமி திருக்கோயில், சதுரகிரி, - 626132, மதுரை .
Arulmigu Sandanamahalingaswamy Temple, Sapdur - 626132, Madurai District [TM032110]
×
Temple History
தல வரலாறு
இத்திருக்கோயில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தைச் சுற்றி நான்கு பக்கங்களிலும் நான்கு கிரிகள் வீதம் பதினாறு கிரிகள் சதுரமாக சூழ்ந்துகளால் இத்தலத்திற்கு சதுரகிரி எனும் பெயர் பெயர் அமைந்துள்ளது. முன்பொரு காலத்தில், கயிலையில். தேவர் முதல் அனைவரும் பார்வதி, பரமேசுவரர் இருவரையும் வலம் வந்து வணங்கையில், பிருங்கி முனிவர் மட்டும், தன்னை விலக்கி, ஈசனை மட்டும் வலம் வருவதின் காரணத்தை பார்வதி மகேசுவரனிடம் கேட்க,
தேவியானவள். அனைவர்க்கும் வேண்டிய மண்ணுலக போக்யங்களை அருள்வதால். ஐம்புலனை வென்று முக்தியை மட்டும் நாடுவோர் ஞானப் பிழம்பான தன்னை மட்டும் வணங்கு வதாய் சிவன் விளக்க,
உடனே பிருங்கி முனிவரிடம், தேவி சக்தி பூஜை செய்யாத வர்களுக்கு தன் அம்சமான சதை எதற்கு...இத்திருக்கோயில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தைச் சுற்றி நான்கு பக்கங்களிலும் நான்கு கிரிகள் வீதம் பதினாறு கிரிகள் சதுரமாக சூழ்ந்துகளால் இத்தலத்திற்கு சதுரகிரி எனும் பெயர் பெயர் அமைந்துள்ளது. முன்பொரு காலத்தில், கயிலையில். தேவர் முதல் அனைவரும் பார்வதி, பரமேசுவரர் இருவரையும் வலம் வந்து வணங்கையில், பிருங்கி முனிவர் மட்டும், தன்னை விலக்கி, ஈசனை மட்டும் வலம் வருவதின் காரணத்தை பார்வதி மகேசுவரனிடம் கேட்க,
தேவியானவள். அனைவர்க்கும் வேண்டிய மண்ணுலக போக்யங்களை அருள்வதால். ஐம்புலனை வென்று முக்தியை மட்டும் நாடுவோர் ஞானப் பிழம்பான தன்னை மட்டும் வணங்கு வதாய் சிவன் விளக்க,
உடனே பிருங்கி முனிவரிடம், தேவி சக்தி பூஜை செய்யாத வர்களுக்கு தன் அம்சமான சதை எதற்கு என வினவ, முனிவர் சதைப் பகுதியை உதறியவுடன் வெறும் எலும்போடு நடக்க இயலாத போது, ஈசன் அளித்த சக்தி மிகுந்த கோல் உதவியால் தன் இருப்பிடம் சென்றார். தன் அம்சமில்லாமல், சிவபலத்தால் முனிவர் நடந்து செல்வதைக் கண்ட பார்வதி, தனக்கென தனி உரூ இன்றி சர்வேஸ்வரனின் ஒரு பாகமாக விருப்பி, அதற்காக தவம் செய்ய பூலோகக் கயிலையாம் சதுரகிரிக்கு வந்தாள்.
அப்போது மழையிலா காலத்தும், திடீரென்று மரம், செடி தழைத்துப் பூக்க, சதுரகிரிவாழ் முனிவர், முனிவர்கள் இவ் 12 அதிசயத்தின் காரணம் நாடுகையில், தேவியைக் கண்டு வணங்கி 15 உலகமாதா அங்கு எழுந்தருளிய காரணம் வினவினர் -
தேவியும் தான் ஈசனின் பாகம்பிரியாளகவும், பரமன் அர்த்த நாரீஸ்வரராக வேண்டியும் தவமிருப்பதைக் கூறினாள்.
பின், தேவி, புரட்டாசி வளர்பிறை தசமி அதிகாலையில் ஓர் சந்தன மரத்தின் கீழ் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து, 21 இழையை ஒன்றாக்கி. 21 முடி இட்டு காப்பாகக் கட்டிக் கொண்டு 21 நாள் (ஐப்பசி அமாவாசை வரை) முறைப்படி அபிஷேக ஆராதனையும் சிவநாம ஜபத் தவமும் முடிக்க. பரமேசுவரன் சதுரகிரிக்கு எழுந்தருளி யாவுமறிந்தவராயினும், தேவி வாயால் அவள் விருப்பம் அறிந்து. சக்தியை தன் இடப்பாகத்தில் ஏற்று அர்த்தநாரீஸ்வரராகி அருளினார்.
மேலும் தேவி பூஜித்த லிங்கத்தை. அங்கிருந்த சட்டநாதர் போன்ற முக்திவிருப்புடைய முனிவரே பூஜித்தல் வேண்டும் என்றும் மற்றவர் பூஜித்தால் அவர்களை உலகப் பொருட்களை விலக்கச் செய்து, தனபால் ஈர்த்து ஆட்கொள்வோம் என்றும் அருளினார்.