அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில், திண்டுக்கல் - 624001, திண்டுக்கல் .
Arulmigu Kottai Mariamman Temple, Dindigul - 624001, Dindigul District [TM032151]
×
Temple History
தல வரலாறு
இவ்வூரில் அமைந்துள்ள மலை, திண்டு போன்று காட்சியளிப்பதால், திண்டுக்கல் என வழங்கப்பட்டது. புராண காலத்தில் பத்மகிரி, திண்டீச்சுரம், நெல்லிவனம் திருப்பெயர்களும் இதற்கு உண்டு. சேர, சோழ, பாண்டிய நாட்டுகளின் நடுப்பகுதியில் அமைந்த நகரமாக இது அமைந்துள்ளது. ஐம்பெரும்காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரத்தின் மதுரைக் காண்டம், பாண்டிய நாட்டின் வடக்கு எல்லையாக கூறுகிறது.
புராண காலத்திலும், சரித்திர காலத்திலும், புகழ்பெற்று விளங்கிய திண்டுக்கல் மலைக்கோட்டையின் கீழே உள்ள கோட்டைக்குளத்திற்கு கிழக்குப்பகுதியில் இருந்து கவாத்து மைதானத்தில் (பேரேடு மைதானம்) திப்பு சுல்தான் காலத்தில் இருந்த ராணுத்தினரால் ஒரு சிறு பீடமும் அதன் பின் மூலஸ்தான அம்மன் விக்ரகமும் ஸ்தாபிக்கப்பட்டது. அதுவே அவர்களுக்கு காவல் தெய்வமாகவும் இருந்து வந்துள்ளது. அதுதான் தற்போது புகழ்பெற்ற...இவ்வூரில் அமைந்துள்ள மலை, திண்டு போன்று காட்சியளிப்பதால், திண்டுக்கல் என வழங்கப்பட்டது. புராண காலத்தில் பத்மகிரி, திண்டீச்சுரம், நெல்லிவனம் திருப்பெயர்களும் இதற்கு உண்டு. சேர, சோழ, பாண்டிய நாட்டுகளின் நடுப்பகுதியில் அமைந்த நகரமாக இது அமைந்துள்ளது. ஐம்பெரும்காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரத்தின் மதுரைக் காண்டம், பாண்டிய நாட்டின் வடக்கு எல்லையாக கூறுகிறது.
புராண காலத்திலும், சரித்திர காலத்திலும், புகழ்பெற்று விளங்கிய திண்டுக்கல் மலைக்கோட்டையின் கீழே உள்ள கோட்டைக்குளத்திற்கு கிழக்குப்பகுதியில் இருந்து கவாத்து மைதானத்தில் (பேரேடு மைதானம்) திப்பு சுல்தான் காலத்தில் இருந்த ராணுத்தினரால் ஒரு சிறு பீடமும் அதன் பின் மூலஸ்தான அம்மன் விக்ரகமும் ஸ்தாபிக்கப்பட்டது. அதுவே அவர்களுக்கு காவல் தெய்வமாகவும் இருந்து வந்துள்ளது. அதுதான் தற்போது புகழ்பெற்ற ஸ்ரீ கோட்டை மாரியம்மன் திருக்கோயில் ஆகும்.
பரம்பரை அறங்காவலர்களால் ஐந்தாவது தலைமுறையாக நிர்வாகம் செய்யும் கோயில் - விழாக் காலங்களில் தசாவதாரக் கோலம், சயனக் கோலத்தில் காட்சி தரும் அம்மன் - மார்ச், அக்டோபரில் சூரியன் வழிபடும் தெய்வம் - இந்து, முஸ்லீம், கிருஸ்துவம் என மும்மதத்தவர்களும் வழிபாடு செய்யும் கோயில் - திண்டுக்கல் பகுதிவாழ் மக்களின் இஷ்ட தெய்வம் என பல்வேறு பெருமைகள் வாய்ந்த ஆலயமாகத் திகழ்கிறது.