Arulmigu Gopinathaswami Temple, Reddiyarchathiram - 624622, Dindigul District [TM032152]
×
Temple History
தல பெருமை
ஸ்தல வரலாறு
13ம் நூற்றாண்டில் நாயக்கர் காலத்தில் காசி யாத்திரை செல்லும் ஓர் அந்தணண் வழியிடையில் ஆந்திர மாநிலம் பெல்லாரி தேசத்தை அடைந்தான். அந்த நாடு நீண்ட நாட்களாக மழை இல்லாத காரணத்தால் வறண்டு இருந்தது அந்த நாட்டை வல்லாள மன்னன்...ஸ்தல வரலாறு
13ம் நூற்றாண்டில் நாயக்கர் காலத்தில் காசி யாத்திரை செல்லும் ஓர் அந்தணண் வழியிடையில் ஆந்திர மாநிலம் பெல்லாரி தேசத்தை அடைந்தான். அந்த நாடு நீண்ட நாட்களாக மழை இல்லாத காரணத்தால் வறண்டு இருந்தது அந்த நாட்டை வல்லாள மன்னன் என்பான் ஆண்டு வந்தான். அம்மன்னனுக்கு கோப்பம்மாள் என்ற மனைவியும், கோபிநாதன் என்ற மகனும் இருந்தார்கள்.அவர்களுக்கு கணக்கற்ற (ஏராளமான ) பசு மந்தைகள் இருந்தன , அந்த நிலையில் யாத்திரை மேற்சென்று அந்தணன் வல்லாள மன்னனிடம் தனது பசிப்பிணியைப் தீர்த்துக் கொள்ள வேண்டியான். மன்னனும் தம் நாட்டின் வறட்சியை உணர்த்தி மிகவும் சிரமப்பட்டு அந்தணனுக்கு உணவமுது கொடுத்து உபசரித்தான். பசி தீர்ந்த அந்தணன் மன்னனுக்கு ஓர் உபகாரம் செய்ய எண்ணினான்.பாண்டி நாட்டின் வளங்களையும், மலை வளங்களையும், நீர் வளங்களையும் எடுத்துரைத்தான். பாண்டிய நாடு சென்றால் வறட்சியால் வாடிக் கொண்டிருக்கும் தங்கள் பசுக்களுக்கும் தங்கட்கும் உணவு கிடைக்கும்.வளமுடன் வாழலாம் என்று சொல்லி யாத்திரையைத் தொடர்ந்தார்.
வல்லாள மன்னனுக்குப் பிறகு அவருடைய மகன் கோபிநாதனும், தாயார் கோப்பம்மாளும் அவ்வந்தணன் கூறிய உபகாரச் செய்தியை நினைவுபடுத்தி தங்களது பசு மந்தைகளையும், உதவிக்குப் பணியாட்களையும் அழைத்துக் கொண்டு பாண்டிய நாடு நோக்கி வந்தனர்..பாண்டிய நாட்டுப் பகுதிக்குள் நுழைந்தவுடன் பசுக் கூட்டங்களோடு ரெட்டியார்சத்திரம் அருகில் வந்து ஓர் குன்றின் அடியில் தங்கினார்கள் இந்த மலையும் மலையைச் சுற்றி உள்ள இடமும் வனாந்திரமாகவும், சோலையாகவும் நீர் நில வளத்தால் நல்ல செழிப்புற்றிருந்தது, பசுக்கூட்டங்கள் தன்னை மறந்து இவ்விடங்களில் தமக்கு இரைதேட மேய்ந்து கொண்டிருந்தது.பசுக்கள் வேறு இடம் செல்லவில்லை. இம்மலை அடிவாரத்தில் மாடுகள் விருத்தியாகிறது.சில ஆண்டுகள் கழிந்த பின் படிப்படியாக மழை குறைந்து பின்பு மழையின்றி இப்பகுதியும் வறுமையாகிவிடுகிறது.வறுமையால் கோபிநாதனுக்கு துக்கம் தாயாமல் யோசனை பல செய்து ஒரு முடிவுக்கு வந்தான்.
இங்கு நல்ல மழை பெய்து மலையடிவாரத்தில் வெள்ளம் ஆறாக ஓட வேண்டும்.மாடுகளுக்கு இரையாக புல்லும் முளைத்து வறுமை நீங்கினால் தன் உயிரை உமக்குக் காணிக்கை ஆக்குகிறேன் என கவலையுடனும், வேதனையுடனும் மனதுக்குள் ஆண்டவனிடம் சங்கல்பம் எடுத்துக் கொண்டான். அன்று இரவு நல்ல மழை பெய்து ஆறாக ஓடியது.போதைப்புல் மலை முழுவதும் முளைத்து மாட்டுத்தீவனமாக ஆயிற்று ஆற்றில் எப்போதும் தண்ணீரும், இரையும் குறைவின்றி கிடைத்தது என மகிழ்ந்தான் கோபிநாதன்.பின் தான் எடுத்துக் கொண்ட சங்கல்பத்தை இத்திருத்தலத்தில் நிறைவேற்றினார்.
அமைவிடம்
இத்திருக்கோயில் திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மேற்கு வட்டம், ரெட்டியார்சத்திரத்திலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் காமாட்சிபுரம் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.
2.வழிபாட்டு முறை ^^ பலன்கள்
இத்திருக்கோயிலில் மூன்று கால பூஜை நடைபெறும். மார்கழி மாதத்தில் மட்டும் நான்கு கால பூஜை நடைபெறும். இத்திருக்கோயிலில் ஸ்ரீகிருஷ்ண பகவான் ஆநிரைகளின் பாதுகாலனாக உள்ளார். ஆதலால் சுவாமிக்கு பால் தயிர் மற்றும் வெண்ணெய் ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெறும். கால்நடைகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் இத்திருத்தலத்திலிருந்து தீர்த்தம் கொண்டு சென்று தெளித்தால் பிணி நீங்கி கால்நடைகள் சுகம் பெறும் என்பது ஐதீகம். மேலும் இத்திருத்தலத்தில் உள்ள ஸ்ரீகிருஷ்ணரை வழிபடுவதன் மூலம்சகல காரியங்களிலும் வெற்றி, குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம் .
3.கோபிநாதன் மலை பெயர் காரணம்
கன்னிவாடி கிராமத்தில் வாழ்ந்து வந்த ஜமீன்தார் இம்மலைக்கு வேட்டையாடுவதற்காக மாட்டு வண்டியில் வந்த போது தற்போது இத்திருத்தலம் அமைந்துள்ள பகுதிக்கு வந்த போது மாடுகள் நடக்க முடியாமல் படுத்துக் கொண்டன.ஜமீன்தாரிடம் அந்தி வேளையில் ஒரு சித்தர் தோன்றி இத்திருத்தலத்தின் உண்மை நிகழ்ச்சியை உணர்த்தினார். வியந்து போன ஜமீன்தார் மலைமேல் உள்ள வேப்ப மரத்தின் அடியில் கோபிநாதன் குழல் ஊதுகின்ற பாவனையிலும், கோப்பம்மாள் தலையில் கஞ்சி கலையம் வைத்திருப்பது போன்ற சிலையும் வைத்து வழிபட ஆரம்பித்தார்கள்.கோபிநாதன் சிலையாக குடி கொண்டிருப்பதால் கோபிநாதன் மலை என்று பெயர் பெற்றது.
இலக்கிய பின்புலம்
அருள்மிகு கோபிநாதஸ்வாமி திருக்கோவில் திண்டுக்கல் மேற்கு வட்டம் திண்டுக்கல் மாவட்டம் பழநி நெடுச்சாலையில் ரெட்டியார்ச்சத்திரத்தில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இத்திருக்கோயில் மலைக்கோவிலாகும் . இம்மலைஅடிவாரத்தில் மாங்கரை என்னும் ஆறும் அமைந்துள்ளது . இத் திருக்கோயில்
தரை மட்டத்தில் இருந்து 450 அடி உயரம் கொண்டது . 619 படிகள் கொண்டது .இம்மலைபடிக்கட்டுகளை பார்க்கும் போது ஆதி சேஷன் மலையில் ஏறுவது போல் காட்சியளிக்கும் .இம்மலையை சுற்றி மூலிகைகள் காணப்படுகின்றது . இத் திருக்கோவில் தரிசனம் செய்து திரும்பும் போது மனதில் ஒருவகை இதமான மனஅமைதி ...அருள்மிகு கோபிநாதஸ்வாமி திருக்கோவில் திண்டுக்கல் மேற்கு வட்டம் திண்டுக்கல் மாவட்டம் பழநி நெடுச்சாலையில் ரெட்டியார்ச்சத்திரத்தில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இத்திருக்கோயில் மலைக்கோவிலாகும் . இம்மலைஅடிவாரத்தில் மாங்கரை என்னும் ஆறும் அமைந்துள்ளது . இத் திருக்கோயில்
தரை மட்டத்தில் இருந்து 450 அடி உயரம் கொண்டது . 619 படிகள் கொண்டது .இம்மலைபடிக்கட்டுகளை பார்க்கும் போது ஆதி சேஷன் மலையில் ஏறுவது போல் காட்சியளிக்கும் .இம்மலையை சுற்றி மூலிகைகள் காணப்படுகின்றது . இத் திருக்கோவில் தரிசனம் செய்து திரும்பும் போது மனதில் ஒருவகை இதமான மனஅமைதி தோன்றுகிறது .