Screen Reader Access     A-AA+
அருள்மிகு சீனிவாச பெருமாள் திருக்கோயில், திண்டுக்கல் - 624001, திண்டுக்கல் .
Arulmigu Seenivasa Perumal Temple, Dindigul - 624001, Dindigul District [TM032153]
×
Temple History

தல வரலாறு

பெருமாள் அடியார்கள் சிலர், மஹாவிஷ்ணுவின் தரிசனம் வேண்டி இங்கு ஒரு யாகம் நடத்தினர் அப்பேது அசுரன் ஒருவன்,அவர்களைத் தொந்தரவு செய்தான். அசுரனை அழித்து யாகம் தடையின்றி நடக்க அருளும்படி அவர்கள் பெருமாளிடம் வேண்டினர். சுவாமியும் அசுரனை அழித்தார். இவ்வேளையில் அவர் உக்கிரமாக இருந்தார் சுவாமியின் உக்கிரத்தைக் குறைக்கும்படி அவர்கள் மகாலட்சுமியை வேண்டினர். தாயாரும் சுவாமியை சாந்தப்படித்தினார். பின்பு இருவரும் இங்கேயே எழுந்தருளினர் பிற்காலத்தில் இங்கு ஸ்ரீதேவி,பூதேவியுடன் சுவாமிக்கு கோவில் எழுப்பப்பட்டது. இவர் சீனிவாசர் என திருநாமம் பெற்றார்.

தல பெருமை

சக்கரத்தாழ்வார், நரசிம்மரன் தரிசனம் கிடைப்பது அபூர்வம், சித்திரை நட்சத்திர நாட்களில் சக்கரத்தாழ்வாருக்கு விசேச திருமஞ்சனத்துடன், பூஜை நடக்கும். கடன் பிரச்சனை தீர,தம்பதியர் ஒற்றுமையுடன் இருக்க இவ்வேளையில் வேண்டிக்கொள்ளலாம்.

இலக்கிய பின்புலம்

தல சிறப்பு : சக்கரத்தாழ்வாருக்கு தனிச்சன்னதி இருக்கிறது இவரது சிலையில் சுற்றிலும் பெருமாளின் தசாவதாரச் சிற்பங்கள் பொறிக்கப்பட்டிருக்கிறது. இவருக்கு பின்புறம் நான்கு கைகளில் சக்கரம் ஏந்தியிருக்கும் நரசிம்மருக்குக் கீழே நாகம் இருக்கிறது இந்த நரசிம்மரைச் சுற்றி அஷ்டலட்சுமிகள் இருக்கின்றனர். இத்தகைய அமைப்பில் சக்கரத்தாழ்வார்,நரசிம்மரின் தரிசனம் கிடைப்பது அபூர்வம். சக்கரத்தாழ்வார், நரசிம்மரன் தரிசனம் கிடைப்பது அபூர்வம், சித்திரை நட்சத்திர நாட்களில் சக்கரத்தாழ்வாருக்கு விசேச திருமஞ்சனத்துடன், பூஜை நடக்கும். கடன் பிரச்சனை தீர,தம்பதியர் ஒற்றுமையுடன் இருக்க இவ்வேளையில் வேண்டிக்கொள்ளலாம். தல வரலாறு : பெருமாள் அடியார்கள் சிலர், மஹாவிஷ்ணுவின் தரிசனம் வேண்டி இங்கு ஒரு யாகம் நடத்தினர் அப்பேது அசுரன் ஒருவன்,அவர்களைத் தொந்தரவு செய்தான். அசுரனை அழித்து யாகம் தடையின்றி நடக்க அருளும்படி அவர்கள் பெருமாளிடம் வேண்டினர். சுவாமியும் அசுரனை...