தல சிறப்பு : சக்கரத்தாழ்வாருக்கு தனிச்சன்னதி இருக்கிறது இவரது சிலையில் சுற்றிலும் பெருமாளின் தசாவதாரச் சிற்பங்கள் பொறிக்கப்பட்டிருக்கிறது. இவருக்கு பின்புறம் நான்கு கைகளில் சக்கரம் ஏந்தியிருக்கும் நரசிம்மருக்குக் கீழே நாகம் இருக்கிறது இந்த நரசிம்மரைச் சுற்றி அஷ்டலட்சுமிகள் இருக்கின்றனர். இத்தகைய அமைப்பில் சக்கரத்தாழ்வார்,நரசிம்மரின் தரிசனம் கிடைப்பது அபூர்வம். சக்கரத்தாழ்வார், நரசிம்மரன் தரிசனம் கிடைப்பது அபூர்வம், சித்திரை நட்சத்திர நாட்களில் சக்கரத்தாழ்வாருக்கு விசேச திருமஞ்சனத்துடன், பூஜை நடக்கும். கடன் பிரச்சனை தீர,தம்பதியர் ஒற்றுமையுடன் இருக்க இவ்வேளையில் வேண்டிக்கொள்ளலாம். தல வரலாறு : பெருமாள் அடியார்கள் சிலர், மஹாவிஷ்ணுவின் தரிசனம் வேண்டி இங்கு ஒரு யாகம் நடத்தினர் அப்பேது அசுரன் ஒருவன்,அவர்களைத் தொந்தரவு செய்தான். அசுரனை அழித்து யாகம் தடையின்றி நடக்க அருளும்படி அவர்கள் பெருமாளிடம் வேண்டினர். சுவாமியும் அசுரனை...