Screen Reader Access     A-AA+
அருள்மிகு மந்தை காளியம்மன் திருக்கோயில், திண்டுக்கல் - 624001, திண்டுக்கல் .
Arulmigu Manthai Kaliamman Temple, Dindigul - 624001, Dindigul District [TM032167]
×
Temple History

தல வரலாறு

அருள்மிகு மந்தை காளியம்மன் திருக்கோயில் சுமார் 150 வருட பழமையான கோயில் ஆகும். ஆதிகாலத்தில் இந்த இடம் மந்தை என அழைக்கப்படுவார்கள், மந்தை என்றால் ஆடு, மாடு இளைப்பாறும் இடம் இங்கு முதியவர் ஒருவர் மாடுகளை மேய்த்து கொண்டு இருந்தார் அங்கு சிலர் இளைப்பாரக் கொண்டு இருந்தனர் அப்போது அந்த மாடு மேய்ப்பவருக்கு அம்மன் அருள் பாலித்து இந்த மந்தையில் மந்தை காளியம்மனாக இருக்கிறேன். வேண்டுவோருக்கு கேட்ட வரம் தரும் காளியம்மன் ஆகும். இங்கு வைகாசித் திருவிழா வளர்பிறை,அம்மாவாசை,பௌர்ணமி அன்று விசேசமாக அபிசேகம் செய்து கொண்டாடப்படுகிறது. ஆடி மாதம் கூல் காய்ச்சி பக்தர்களுக்கு சிறப்பாக கொடுக்கப்பட்டு திருவிழா நடத்தப்படுகிறது. விசேச காலங்களில் சிறப்பு பூஜையும் நடைபெறுகிறது.