திண்டுக்கல் நகரில், முக்கியமான இடத்தில் அமைந்துள்ள அருள்மிகு மந்தை காளியம்மன் திருக்கோயில் சுமார் 75 வருட பழமையான கோயில் ஆகும். இத்திருக்கோயில் அமைந்துள்ள இடமானது முற்காலத்தில் மந்தை என அழைக்கப்பட்டுள்ளது. மந்தை என்றால் ஆடு, மாடு இளைப்பாறும் இடமாகும். இங்கு முதியவர் ஒருவர் மாடுகளை மேய்த்து கொண்டு இருந்தார் அங்கு சிலர் இளைப்பாரக் கொண்டு இருந்தனர். அப்போது அந்த மாடு மேய்க்கும் முதியவருக்கு அம்பாள் தான் இங்கு அருள்பாலிப்பதாகவும், தனக்கு இந்த மந்தையில் மந்தை காளியம்மனாக இருக்கிறேன் என அசரீரியாக தெரிவித்ததால் இவ்விடத்தில் கோயில் கட்டப்பட்டு உள்ளது. இங்கு வைகாசித் திருவிழா வளர்பிறை,அம்மாவாசை,பௌர்ணமி அன்று விசேசமாக அபிசேகம் செய்து கொண்டாடப்படுகிறது. ஆடி மாதம் கூல் காய்ச்சி பக்தர்களுக்கு சிறப்பாக...