அருள்மிகு ஆஞ்சநேய பெருமாள் திருக்கோயில், திண்டுக்கல் - 624001, திண்டுக்கல் .
Arulmigu Anjaneya Perumal Temple, Dindigul - 624001, Dindigul District [TM032174]
×
Temple History
தல வரலாறு
திரேதாயுகத்தில் இராமாயணம் என்ற சிறப்பு மிக்க காவியம் நடந்தது. அதில் யுத்த காண்டத்தில் ஸ்ரீ சீதாபிராட்டியை மீட்க ஸ்ரீராமபிரான், இராவணனுடன் போர் தொடுத்தார். அதில் இராவணனுடைய மகன் இந்திரஜித், ஸ்ரீராமபிரான் தம்பியான லட்சுமணன் மீது பிரம்மாஸ்திரத்தை விட லட்சுமணன் மூர்ச்சை ஆகி விழுந்தார். இதை அறிந்த ஸ்ரீராமபிரான் தனது சகோதரன் மூர்ச்சை அடைந்து விழுந்ததை பார்த்து மிகவும் சோகமுற்று கதறி அழுதார். சகோதரா நீ விழுந்து விட்டாய் என்று சேதி கேட்டு என்னால் பொறுக்கமுடியவில்லை எனது சீதா பிராட்டியை எப்படி மீட்கப்போகிறேன் என்று கதறி அழுதார் அதற்கு விபிஷியாழ்வார் கவலைபடாதே. இமயமலையில் இருக்கும் சாக்கிய மூலையை கொண்டு வந்து கொடுத்தால் உயித்து விடுவார் என்று சொல்ல இதை கேட்டறிந்த ஸ்ரீஆஞ்சநேயர் வானுயரமாக பறந்து...திரேதாயுகத்தில் இராமாயணம் என்ற சிறப்பு மிக்க காவியம் நடந்தது. அதில் யுத்த காண்டத்தில் ஸ்ரீ சீதாபிராட்டியை மீட்க ஸ்ரீராமபிரான், இராவணனுடன் போர் தொடுத்தார். அதில் இராவணனுடைய மகன் இந்திரஜித், ஸ்ரீராமபிரான் தம்பியான லட்சுமணன் மீது பிரம்மாஸ்திரத்தை விட லட்சுமணன் மூர்ச்சை ஆகி விழுந்தார். இதை அறிந்த ஸ்ரீராமபிரான் தனது சகோதரன் மூர்ச்சை அடைந்து விழுந்ததை பார்த்து மிகவும் சோகமுற்று கதறி அழுதார். சகோதரா நீ விழுந்து விட்டாய் என்று சேதி கேட்டு என்னால் பொறுக்கமுடியவில்லை எனது சீதா பிராட்டியை எப்படி மீட்கப்போகிறேன் என்று கதறி அழுதார் அதற்கு விபிஷியாழ்வார் கவலைபடாதே. இமயமலையில் இருக்கும் சாக்கிய மூலையை கொண்டு வந்து கொடுத்தால் உயித்து விடுவார் என்று சொல்ல இதை கேட்டறிந்த ஸ்ரீஆஞ்சநேயர் வானுயரமாக பறந்து இமயமலையை நோக்கி சென்றடைந்து அங்கு சஞ்சீவி மூலிகை தேட நோயின்மை இல்லாததால் இமயமலையின் ஒரு பகுதியை பெயர்த்து இலங்கையை நோக்கி வந்து கொண்டிருந்தார். வரும் வழியில் திண்டி மாநகரை பரிபாலனம் ஆட்சி செய்து வந்த திண்டாசுரன். ஸ்ரீஆஞ்சநேயரை நிறுத்தி எனது எல்லையை எனது எல்லையை கடந்து செல்ல வேண்டுமென்றால் என்னிடம் யுத்தம் செய்து என்னை ஜெயித்து விட்டு போ என்று சொன்னேன். இருவருக்கும் கடும்போர் நடந்தது யுத்தத்தில் திண்டாசுரனை வதம் செய்து ஸ்ரீஆஞ்சநேயர் வெற்றியடைந்தார்.