தலவரலாறு அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகன் சக்கரவர்த்தி திருமகன் ஸ்ரீ ராமபிரானின் அதீத பக்தர் ஸ்ரீஆஞ்சநேயர் திண்டி மாநகரில் அனைவரையும் காத்து நின்றகோலத்தில் அருள் பாலித்து வருகிறார். அமைப்பு : பஞ்சபூதங்கள் என்று கொண்டாடபடுகின்றவைகளில் மலை நீருக்கு நடுவே அமைந்திருப்பது மிக மிக அபூர்வமானது. திரேதாயுகத்தில் இலங்கையில் ஸ்ரீ ராமபிராமனுக்கும் இராவனணுக்கும் பெரும் யுத்தம் நடந்தது அதில் பெரும்பங்கு எடுத்து ஸ்ரீஆஞ்சநேயர் அசுரர்களை அளித்து வெற்றி வாகை சூடி யுத்த கோலத்திலேயே திண்டி மாநகரில் ஸ்ரீஆஞ்சநேயர் நின்ற கோலத்திலேயே உள்ள நிலையில் திருப்பாதங்களில் பாதரகையும் இடுப்பில் கத்தியும், இடது கையில் தாமரையும், வலது கை அபயமாகவும் திருமார்பில் சிவலிங்கத்தையும் தாங்கி திண்டி மாநகரில் உள்ள மக்களை காத்து அருள் பாலித்து வருகிறார். தல வரலாறு :...