அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில், செட்டிநாயக்கன்பட்டி - 624004, திண்டுக்கல் .
Arulmigu Anjaneyar Temple, Chettinayakkampatti - 624004, Dindigul District [TM032182]
×
Temple History
தல பெருமை
ஸ்தல வரலாறு
கி.பி. 15-ம் நூற்றாண்டில் மாமன்னர் கிருஷ்ணதேவராயர் ஆட்சி காலத்தில், மத்வ சம்பிரதாய அந்தணர்கள் பலர் கர்நாடகத்திலிருந்து திண்டிமாநகருக்கு புலம் பெயர்ந்தனர். அவர்களின் வழிபாட்டிற்காக, நகரின் மத்தியில் இருந்த குளத்தின் கரையில் அவர்களால், ஸ்ரீ ஆஞ்சநேயர் பிரதிஷ்டை செய்யப்பட்டு, அவர்கள் சம்பிரதாயப்படி அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தது.
பின்னர் கி.பி. 17-ம் நூற்றாண்டில், வெள்ளையர்களை எதிர்த்து போரிட்ட விருப்பாச்சி பாளையக்காரரான கோபால நாயக்கர் அவர்களால், 100 யானைகள் மற்றும் 100 குதிரைகள் ஒரே சமயத்தில் நீர் அருந்தி ஓய்வு எடுப்பதற்கு ஏதுவாக அச்சிறிய குளம் விரிவு படுத்தப்பட்டு, பின்னர் அந்த குளம் அவர் பெயரிலேயே கோபாலசமுத்திரம் என்று அழைக்கப்பட்டது. அப்போது இந்தக் கோவில் இருக்கும் இடம் ஆஞ்சநேயர் மேடு என்றே அழைக்கப்பட்டது.
இக்கோயிலின்பாற்...ஸ்தல வரலாறு

இக்கோயிலின்பாற் ஈர்க்கப்பட்ட கோபால நாயக்கர் தனக்கு ஒரு பாலகன் பிறக்க வேண்டி ஸ்ரீ ஆஞ்சநேயப் பெருமாளிடம் வரம் கேட்க, ஸ்ரீ ஆஞ்சநேயரும் பாலகனை அருளினார்.
அதன் பொருட்டு கோபால நாயக்கர் இக்கோவிலின் மூர்த்தியை ஸ்ரீ பால ஆஞ்சநேயர் என்றே அழைக்கலானார். பின்னர் பக்தர்கள் எல்லோராலும் ஸ்ரீ பால ஆஞ்சநேயர் என்றே அழைக்கப்பெற்றார்.
மேலும் கோபால நாயக்கர் அவர்கள் பாலகன் பிறந்த மகிழ்ச்சியால், கோபாலசமுத்திரத்தின் பராமரிப்பு உரிமையும் ஸ்ரீ பால ஆஞ்சநேயருக்கே உரித்தானது என்று வாய்க்கராலில் சொல்லிச் சென்றார் என்பதும் வரலாறு. அதன் பின்னர் கோபாலசமுத்திரத்தின் மீன்பிடி குத்தகை போன்றவற்றைக்கூட கோவில் நிர்வாகமே கவனித்து வந்தது.
ஸ்ரீ பால ஆஞ்சநேயரின் தீவிர பக்தரான, திண்டிமாநகரில் வசித்த வைசியர் சுப்ரமண்ய செட்டியார் என்பவர் ஸ்ரீ பால ஆஞ்சநேயர் திருக்கோவிலின் நந்தவனத்திற்காக, கோவிலின் கிழக்குப்புறம் உள்ள அவருக்கு பாத்தியப்பட்ட சுமார் 2.42 ஏக்கர் நிலத்தை தாணசெட்டில்மென்டாக 27-03-1895ல் பத்திரப் பதிவு செய்து கொடுத்தார்.
கோபாலசமுத்திரத்தின் தென்மேற்கு கரையில் உள்ள ஸ்ரீ பால ஆஞ்சநேயர் சன்னதியின் முகப்பில், வடமேற்கில், ஸ்ரீ பால ஆஞ்சநேயர் இராகு-கேதுவுடனும் அமையப்பெற்றுள்ளார். இது இராகு-கேது பரிகார ஸ்தலமாக விளங்கியது என்பதற்கும் சான்றாகும்.
இதேபோன்று ஸ்ரீ பால ஆஞ்சநேயர் சன்னதியின் கிழக்கே விநாகயப் பெருமான் , இராகு-கேதுவுடன் ஸ்ரீ வரசித்தி விநாயகராக வீற்றிருக்கிறார்.
ஸ்ரீ ஆஞ்சநேயரின் பரம பக்தரும் மத்வகுலத்தை உத்தாரணம் செய்தவருமான ஸ்ரீ குரு ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின் ம்ருத்திகா பிருந்தாவனம் பக்தர்களுக்கு அருள்பாலிப்பதற்காகவும் த்யான மண்டபமாகவும், ஸ்ரீ பால ஆஞ்சநேயர் சன்னதிக்கு பின்புறம் தெற்கு பகுதியில் அமையப்பெற்றுள்ளது.
திண்டுக்கல், பிராஹ்மண சமாஜத்தால் நிர்வகிக்கப்பட்டு வரும் இத்திருக்கோவில், கோபாலசமுத்திரத்தின் தென்மேற்கே உயர்ந்த கரையில், கண்ணி மூலையில் மேற்கு நோக்கி அமையப்பெற்ற மூர்த்தியான ஸ்ரீ பால ஆஞ்சநேயர், பணிவின் அவசியத்தை உணர்த்தும் வன்னம், நின்ற கோலத்தில் கை கூப்பியவாறும், தன் வாலில் மணியுடன், மக்களைக் காக்க தயாராக இருப்பது போலவும், அன்பின் உருவமாக குழந்தையைப்போல் காட்சி தந்து வேண்டுவோர்க்கு வேண்டிய வரம் தந்து அருள் புரிகிறார்.
இத்திருக் கோவிலில் ஸ்ரீ ராம நவமியும், மார்கழி மாதம் நித்தமும் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்யப்பட்டு ஸ்ரீ ஹனுமத் ஜெயந்தி உத்ஸவமாக கொண்டாடப்படுகிறது.
இது தவிர ஸ்ரீ குரு ஸ்ரீ ராகவேந்திரர் ஆராதனையாக மூன்று நாட்களும், ஸ்ரீ குரு ஸ்ரீ ராகவேந்திரர் வர்தந்தி ஏழு நாட்கள் விஷேசங்களாக கொண்டாடப்படுகிறது.