ஸ்தல வரலாறு கி.பி. 15-ம் நூற்றாண்டில் மாமன்னர் கிருஷ்ணதேவராயர் ஆட்சி காலத்தில், மத்வ சம்பிரதாய அந்தணர்கள் பலர் கர்நாடகத்திலிருந்து திண்டிமாநகருக்கு புலம் பெயர்ந்தனர். அவர்களின் வழிபாட்டிற்காக, நகரின் மத்தியில் இருந்த குளத்தின் கரையில் அவர்களால், ஸ்ரீ ஆஞ்சநேயர் பிரதிஷ்டை செய்யப்பட்டு, அவர்கள் சம்பிரதாயப்படி அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தது. பின்னர் கி.பி. 17-ம் நூற்றாண்டில், வெள்ளையர்களை எதிர்த்து போரிட்ட விருப்பாச்சி பாளையக்காரரான கோபால நாயக்கர் அவர்களால், 100 யானைகள் மற்றும் 100 குதிரைகள் ஒரே சமயத்தில் நீர் அருந்தி ஓய்வு எடுப்பதற்கு ஏதுவாக அச்சிறிய குளம் விரிவு படுத்தப்பட்டு, பின்னர் அந்த குளம் அவர் பெயரிலேயே கோபாலசமுத்திரம் என்று அழைக்கப்பட்டது. அப்போது இந்தக் கோவில் இருக்கும் இடம் ஆஞ்சநேயர் மேடு என்றே அழைக்கப்பட்டது. இக்கோயிலின்பாற்...
| 06:30 AM IST - 12:00 PM IST | |
| 05:31 PM IST - 08:30 PM IST | |
| 12:00 PM IST - 05:30 PM IST | |
| சாதாரண நாட்களில் காலை 6 மணி முதல் நண்பகல் 11 மணியளவிலும், பிரதி சனி மற்றும் வியாழக்கிழமைகளில் 12 மணியளவிலும் நடை திறந்திருக்கும் சாதாரண நாட்களில் மாலை 5.30 மணிமுதல் இரவு 8 மணியளவிலும், பிரதி சனி மற்றும் வியாழக்கிழகைகளில் இரவு 9 மணி வரை நடை திறந்திருக்கும். | |