அருள்மிகு சௌந்தரராஜப்பெருமாள் திருக்கோயில், வடமதுரை - 624802, திண்டுக்கல் .
Arulmigu Soundararaja Perumal Temple, Vadamadurai - 624802, Dindigul District [TM032196]
×
Temple History
தல வரலாறு
அருள்மிகு சௌந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் திண்டுக்கல் மாநகருக்கு கிழக்கே சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள வடமதுரை பேரூராட்சியில் உள்ளது. அருள்மிகு சௌந்தரவல்லி தாயார் உடனுறை சௌந்தரராஜ பெருமாள் ஆக இத்திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள இத்திருக்கோயிலின் காலம் 13 ஆம் நூற்றாண்டு ஆகும். சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டம நாயக்கர் மகன் நாயக்கரால் திருப்பணி செய்யப்பட்டதாக கல்வெட்டு ஒன்றின் மூலம் அறிய முடிகிறது.
இத்திருக்கோயிலில் 15 அடி உயர பழங்கால சுற்றுச்சுவர் கொண்ட சுமார் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள மிகப்பெரிய கோயிலாகும். அருள்மிகு சௌந்தரராஜப்பெருமாள் அருள்மிகு சௌந்தரவல்லி தாயார் தனித்தனியாக சன்னதிகள் சிறப்புடன் கட்டப்பட்டுள்ளன. மேலும் கருடாழ்வார் சன்னதியும் விஷ்ணு துர்க்கை சன்னதியும் சுற்றுப்புறங்களில் அருள்மிகு விஷ்வக்சேனர் சன்னதி அருள்மிகு சக்கரத்தாழ்வார் சன்னதி அருள்மிகு லட்சுமி...அருள்மிகு சௌந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் திண்டுக்கல் மாநகருக்கு கிழக்கே சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள வடமதுரை பேரூராட்சியில் உள்ளது. அருள்மிகு சௌந்தரவல்லி தாயார் உடனுறை சௌந்தரராஜ பெருமாள் ஆக இத்திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள இத்திருக்கோயிலின் காலம் 13 ஆம் நூற்றாண்டு ஆகும். சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டம நாயக்கர் மகன் நாயக்கரால் திருப்பணி செய்யப்பட்டதாக கல்வெட்டு ஒன்றின் மூலம் அறிய முடிகிறது.
இத்திருக்கோயிலில் 15 அடி உயர பழங்கால சுற்றுச்சுவர் கொண்ட சுமார் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள மிகப்பெரிய கோயிலாகும். அருள்மிகு சௌந்தரராஜப்பெருமாள் அருள்மிகு சௌந்தரவல்லி தாயார் தனித்தனியாக சன்னதிகள் சிறப்புடன் கட்டப்பட்டுள்ளன. மேலும் கருடாழ்வார் சன்னதியும் விஷ்ணு துர்க்கை சன்னதியும் சுற்றுப்புறங்களில் அருள்மிகு விஷ்வக்சேனர் சன்னதி அருள்மிகு சக்கரத்தாழ்வார் சன்னதி அருள்மிகு லட்சுமி நரசிம்மர் சன்னதி அருள்மிகு ஆஞ்சநேயர் சன்னதி அருள்மிகு ஆண்டாள் சன்னதிகள் தனித்தனியாக அமைக்கப்பெற்றுள்ளது திருக்கோயிலில் வாகன மண்டபம் யாகசாலை மடப்பள்ளி ஆகிய தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளன. கொடிக்கம்பமும் சிறப்புடன் அமைந்துள்ளது. கோயில் நுழைவாயிலின் முன் புறத்தில் ஆஞ்சநேயர் சன்னதியும் தீபமேற்றும் கம்பமும் அமைந்துள்ளது.
இது தென்கலை திருக்கோயிலாகும். பாஞ்சராத்திர ஆகம முறைப்படி வழிபாடு நடைபெறுகிறது இத்திருக்கோயிலுக்குச் சொந்தமாக பால்கேணி ஒன்று அமைந்துள்ளது. 10 அடி நீளமும் 10 அடி அகலமும் 10 அடி ஆழமும் உடைய இப்பால்கேணியில் வறட்சியான காலங்களில் கூட தண்ணீர் வற்றாமல் இருக்கும். ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் பெருமாள் பால்கேணிக்கு சென்றே மண்டுக மகரிஷிக்கு வரம் கொடுத்து வருகிறார்.
வடமதுரை என்ற பெயரில் ஆழ்வார்கள் பாசுரங்கள் பல திவ்யப் பிரபந்தங்களில் காணக்கிடைக்கின்றன எனவே இதன் அமைப்பும் பழமையும் இதுவும் ஒரு திவ்ய தேசம் ஆகும் என எண்ணத் தூண்டுகிறது இதன் தலவிருட்சம் வில்வ மரமாகும்.
ஆடி மாதம் இத்திருக்கோயில் பிரம்மோற்சவ திருவிழா கொண்டாடப்படுகிறது 13 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் கொடியேற்றம் செய்யப்பட்டு ஒவ்வொரு நாளும் அனுமார் அன்னம் சிம்மம் கருடன் சேஷ வாகனம் யானை வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது ஏழாம் நாளன்று திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெறும் ஆடிப்பூர தேரோட்ட உற்சவம் உண்டு குதிரை வாகனத்தில் வீதி உலா மற்றும் முத்துப் பல்லக்கில் பெருமாள் உற்சவம் வரும் நாட்களில் சுற்றுப்பகுதி கிராமத்தினர் திரளாக வந்திருந்து பெருமாளை வழிபட்டு அருள் பெற்றுச் செல்வர்.
சித்ரா பௌர்ணமி மூன்று நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது முதல் நாள் பெருமாள் பால்கேணிக்கு வந்து மண்டுக மகரிஷிக்கு வரம் தருவார் அதே சிறப்புடைய உற்சவமும் பங்குனி மாதம் 9 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. பெருமாள் ஒன்பது நாட்கள் திண்டுக்கல் நாகல்நகர் வீதியில் நகர்வலம் சென்று தங்கிய பின் வடமதுரை வந்து சேருவது வழக்கம் .
ஆடி மாதம் ஆடிப்பெருக்கை 18ஆம் திருநாளில் கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதம் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு வழிபாடு பூஜைகள் நடத்தப்படுகிறது. உரியடி விழாவும் மற்றும் நடத்தப்படும் நவராத்திரி தினங்களில் அம்பாள் ஒன்பது தினங்களும் இருந்து பத்தாம் நாளன்று விஜயதசமியில் சுவாமி அம்பு போடும் உற்சவம் காணுதற்கு அரியதாகும்.
கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை தீப விழாவை மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி தை மாதம் முழுவதும் சுவாமி நகர்வலம் வந்து அருள்பாலிக்கும் பண்டிகை தினங்களாகும் இத்திருக்கோயிலில் தினசரி மூன்று கால பூஜை நடைபெற்று வருகிறது.