அருள்மிகு சவுந்தரவள்ளி தாயார் உடனுறை சவுந்தரராஜ பெருமானாக இத்திருத்தலத்தில் எழுந்தருளியுள்ளார். சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு வல்ல கொண்டம நாயக்கர் மகன் ருத்ரப்ப நாயக்கரால் திருப்பணி செய்யப்பட்டதாக கல்வெட்டு கூறுகிறது. இது தென்கலை கோவிலாகும். இங்கு பாஞ்சராத்ர ஆகம முறைப்படி வழிபாடு நடைபெறுகிறது. இத்திருக்கோவிலுக்கு சொந்தமாக பால் கேணி ஒன்று அமைந்துள்ளது. குதிரை வாகனத்தில் மின் அலங்காரத்துடன் வீதி உலா மற்றும் முத்துப் பல்லக்கில் பெருமாள் உற்சவம் வரும் நாட்களில் சுற்று வட்டார பகுதி கிராமத்தினர் திரளாக வந்து பெருமாளை வழிபட்டு அருள் பெற்று செல்வர். சவுந்தரராஜ பெருமாளை தரிசித்தால் தொழில் வளரும், குடும்பம் செழித்தோங்கும், திருமண யோகம் கூடி வரும், நீண்ட ஆயுளுடன் எல்லா வளமும் பெற்று வாழலாம் என்பது ஐதீகம்.