அருள்மிகு மூலநாதசுவாமி திருக்கோயில், தென்கரை - 625207, மதுரை .
Arulmigu Moolanathasamy Temple, Tenkarai - 625207, Madurai District [TM032259]
×
Temple History
தல வரலாறு
அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாத சுவாமி திருக்கோயிலில் காணப்படும் கல்வெட்டுகள் 11 ஆம் நூற்றாண்டின் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டு, அதன்பிறகு சோழர்கள் மற்றும் நாயக்கர்கள் மற்றும் அதன் பின்னர் இந்த பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த மன்னர்களால் பராமரிக்கப்பட்டது. வேள்விக்குடியின் புகழ்பெற்ற செப்பேடு இந்த பிராந்தியத்தைச் சேர்ந்ததாகும். இவை கோவிலின் உள்கட்டமைப்பை விவரிக்கின்றன.
கி.பி 946ஆம் ஆண்டில் மன்னர் வீரபாண்டியன் சிவபெருமானுக்காக ஒரு கோவிலைக் கட்டியதாக தென்கரை புராணமும் கல்வெட்டுகளும் கூறுகின்றன. அதன்பிறகு 100 ஆண்டுகளுக்கு பிறகு இத்திருக்கோயில் சிதிலமடைந்ததைத் தொடர்ந்து, 11ஆம் நூற்றாண்டில், பராக்கிரமப் பாண்டியன் அதே இடத்தில் மீண்டுமு் இத்திருக்கோவிலைக் கட்டினார். இது முடிவடைய 17...அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாத சுவாமி திருக்கோயிலில் காணப்படும் கல்வெட்டுகள் 11 ஆம் நூற்றாண்டின் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டு, அதன்பிறகு சோழர்கள் மற்றும் நாயக்கர்கள் மற்றும் அதன் பின்னர் இந்த பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த மன்னர்களால் பராமரிக்கப்பட்டது. வேள்விக்குடியின் புகழ்பெற்ற செப்பேடு இந்த பிராந்தியத்தைச் சேர்ந்ததாகும். இவை கோவிலின் உள்கட்டமைப்பை விவரிக்கின்றன.
கி.பி 946ஆம் ஆண்டில் மன்னர் வீரபாண்டியன் சிவபெருமானுக்காக ஒரு கோவிலைக் கட்டியதாக தென்கரை புராணமும் கல்வெட்டுகளும் கூறுகின்றன. அதன்பிறகு 100 ஆண்டுகளுக்கு பிறகு இத்திருக்கோயில் சிதிலமடைந்ததைத் தொடர்ந்து, 11ஆம் நூற்றாண்டில், பராக்கிரமப் பாண்டியன் அதே இடத்தில் மீண்டுமு் இத்திருக்கோவிலைக் கட்டினார். இது முடிவடைய 17 ஆண்டுகள் ஆனதாகத் அறியவருகிறது. பாண்டியர்களின் கட்டுமானம் மற்றும் பங்களிப்புகள் குறித்து திருக்கோவிலில் கல்வெட்டுகள் உள்ளன. அருள்மிகு மூலனாத சுவாமி திருக்கோயில் கி.பி 1090ல் கட்டி முடிக்கப்பட்டதாக அறியவருகிறது.
மன்னர் பரக்ரம பாண்டியன், ஸ்ரீவல்லபா பாண்டியன், குலசேகர பாண்டியன் மற்றும் பின்னர் நாயக்கர் ஆட்சியாளர்கள் ஏராளமாக நன்கொடை அளித்தனர். கி.பி 1629 இல் திருமலை நாயக்கர் மற்றும் 1673 A.D இல் சொக்கநாத் நாயக்கர் ஆகியோரின் கல்வெட்டுகள் இத்திருக்கோயிலுக்கு அவர்கள் செய்த பங்களிப்பை விவரிக்கிறது..அருள்மிகு அகிலாண்டேஸ்வரி தேவிக்கு தனி சன்னதி உள்ளது. திருக்கோயிலைச் சுற்றி ஒரு பெரிய சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது.