Screen Reader Access     A-AA+
அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயில், வீரபாண்டி - 625534, தேனி .
Arulmigu Gowmariayyan Temple, Veerapandi - 625534, Theni District [TM032281]
×
Temple History

தல வரலாறு

அரும்பெரும் தமிழகத்தில் அளநாட்டின்  ஒரு பகுதியே வீரபாண்டி. இராச சிங்கன் என்னும் பாண்டிய மன்னன் வைகை மார்க்கமாக வந்து கொண்டிருக்கும் போது வீரபாண்டி திருக்கோயிலைக் கண்டான். இத்திருக்கோயில்களை அவனது ஆறாவது பாட்டனாரான வீரபாண்டிய மன்னன் கட்டினான். வீரபாண்டிய மன்னன் மதுரையில் ஆட்சி புரிந்த போது ஊழ்வினையால் தன் இரண்டு கண்களையும் இழக்க நேர்ந்தது. உடன் இறைவனிடம் முறையிட்டான். இறைவனும் அவனது கனவிற் தோன்றி இன்றைய வீரபாண்டித்தலங்கள் இருக்கும் இடத்தைச் சுட்டிக்காட்டி நீ  வைகைக்கரை ஓரமாகச் சென்ற நிம்பா ஆரணியத்தில் உமாதேவி அம்சம் பெற்ற ஸ்ரீ கௌமாரி தவமியற்றுகிறாள். அங்கு சென்று அவள் தாள் வணங்கு .உன் கண்கள் ஒளிபெறும் எனக்கூறி அருளினார்.அவ்வண்ணமே வீரபாண்டிய மன்னன் கௌமாரியை வணங்கி ஒரு கண்ணும் கண்ணீ்ஸ்வரமுடையாரை வணங்கி மற்றொரு...